பக்கம்:அரை மனிதன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

19


 களைத் தருகிறார்கள். சமுதாயத்தில் இந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தத்தானே. தனித்தனி வீடுகள் கட்டிக் கொண்டு நிம்மதியாக ஒதுங்கி வாழ்கிறவர்களுக்கு இப்படி அதிர்ச்சிகள் ஏற்படத்தான் செய்கின்றன. அப்படி யாரும் எங்கேயும் ஒதுங்கி வாழ முடியாது. சமுதாயத்தில் வாழமுடியாத நிலையில் திருட்டுத் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்தேன். சமுதாயத்தில் வாழக்கூடிய வசதி உடையவர்கள் கொள்ளை அடித்தார்கள். அதைக் கண்டு யாரும் பீதி அடைவதில்லை. எங்கோ யாரோ ஓரிருவர் திருடும்போது அது விளம்பரப் படுத்தப்படுகிறது. அதைப் பற்றி எங்கும் பேசுகிறார்கள். லட்சக்கணக்கில் ஏன் கோடிக் கணக்கில் ஊழல் நடக்கிறது. அச்செய்திகளைக் கண்டு யாரும் பீதி அடைவதில்லை; கவலைப்படுவதும் இல்லை. எங்கோ சில ஆயிரங்கள் கொள்ளை அடிக்கப்படுமாயின் உடனே அதைப் பற்றிப் பேட்டிகள் விமர்சனங்கள் விவரங்கள் தரப்படுகின்றன. முன்னதை மறந்து விடுவார்கள். பின்னதை மறவாமல் பேசுவார்கள். ஏன்? இது தன்னைப் பற்றியது. தங்கள் வீட்டிலும் யாராவது புகுந்தால் அந்த அச்சம்தான் இதைப் பற்றி அதிகம் நினைக்கச் செய்கிறது இரண்டைப் பற்றியும்தான் நினைத்துப் பார்க்க வேண்டும். முன்னதைத் தடுக்கப் பொது வாழ்வு சீர்பட வேண்டும். பின்னதைத் தடுக்க இந்த உதிரிகள் வாழ்வதற்கு வழித் தேடி தரவேண்டும். இப்படி என் நினைவுகள் அவள் சொல்லிவிட்டுச் சென்ற சில சொற்களால் தோன்றக் காரணம் ஆயின. அதற்குள் பேச்சுக்கு அங்கு கூலிப் போர்ட்டர் நண்பர் வந்து சேர்ந்தார்.

“என்னப்பா! இன்னைக்கு உன் கன்னம்’’

"புளிச்சுப் போச்சு”

"அதுசரி உன் கன்னத்தை யார் இனிக்க வைக்கப் போகிறார்கள். நீ என்ன பெண்ணா என்ன?' என்று கிண்டலாகப் பேசினார். கன்னத்துக்குப் புளிப்பும் இனிப்பும் தோன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/21&oldid=1461928" இலிருந்து மீள்விக்கப்பட்டது