பக்கம்:அரை மனிதன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அரை மனிதன்


 "அது ரொம்ப பழங்கதை. அந்த அரசியல் சூழ்நிலையில் அப்படித்தான் ஒவ்வொருவரும் செய்வார்கள். அதாவது அவனவன் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவர்கள். மேலும் மிகவும் கீழ்மட்டமான நிலிையிலிருந்து வந்தபிறகு அதிகாரம் கைக்கு வந்ததும் அனுபவிக்க வேண்டுமென்ற ஆசை வந்து விட்டது. அனுபவித்தார்கள்.'

'இருந்தாலும் இவ்வளவு கொள்ளை அடிக்கக் கூடாது. பொது வாழ்க்கையில் பகல் கொள்ளையாகத்தான் ஆகி விட்டது.'

'இது நம்நாட்டு அரசியல் முறை. அது அவர்களுக்குத் தொழில் ஆகிவிட்டது. எதையும் செய்ய முடியவில்லை யென்றால் வக்கீல் படிப்பு படிக்கிறான். அல்லது அங்கும் இங்கும் கஷ்டப்படுகிறான். தேர்தலில் நிற்கிறார்கள். வெற்றி பெற்றதும் அவன் பணத்துக்குப்பட்ட கஷ்டம் தெரிகிறது. உடனே வாய்ப்பு வரும்போது சம்பாதிக்கிறான். இப்ப்டித்தான் ஒவ்வொருவரும்'

"செய்யட்டும். ஏதோ இலைமறைவாகக் காய் மறை வாகப் போயிருந்தால் பரவாயில்லை. இப்படி லட்சம் லட்சமாகக் கொள்ளையடித்தால்'

'அவனுக்குத் தேவைப்பட்டது; வாய்ப்புக் கிடைத்தது. அதுமட்டுமல்ல. தன்னைச் சுற்றி ஒரு கூட்டத்தையே அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது எல்லாநிலையிலும்' -

'தலைவன் என்றால் அப்படித்தான்; பலபேரை விலை கொடுத்தும் வாங்கவேண்டியிருக்கும். இந்த அரசியல் முறை அடியோடு மாற வேண்டும்.'

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாளும் சுமைதூக்கும் சுமைதாங்கியாய் இருக்கும் கூலி போர்ட்டர் அவர் இப்படி புதிய தத்துவத்தைச் சொல்கிறாரே என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/24&oldid=1461932" இலிருந்து மீள்விக்கப்பட்டது