பக்கம்:அரை மனிதன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அரை மனிதன்


 “பின்?”

"வாழ்க்கையைத் தேடி'

'உனக்கு என்ன வேலை தெரியும்?'
'அது இல்லை. பச்சையாகச் சொல்லட்டுமா? ஆம்படை யானைத் தேடி.'

"ஓ! அவர் இங்கு என்ன உத்தியோகஸ்தர்?’’

'இல்லை'

'கூலியாளா?’’

"எவனாவது ஒருவன் வேண்டும் அவ்வளவுதான். அதை நீங்கள் மாப்பிள்ளை தேடி என்பீர்கள்; நான் அதற்கு அடுத்த நிலையைக் குறிப்பிட்டேன். அவ்வளவு தான்'

அவளுக்கு ஒரு மாப்பிள்ளையைத் தேடித் தரமுடியாமல் போய்விட்டது என்பதை உணர்ந்தேன். சே! இவ்வளவு பச்சையாகப் பேசுவாள் என்று எதிர்ப்பார்க்கவில்லை.

'இப்படி உண்மை சொல்கிறேனே என்று பயப் படுகிறாயா?”

'உண்மையைக் கண்டு சில சமயம் பயந்துதான் ஆக வேண்டியிருக்கிறது.'

"நான் இருந்த விடுதி அப்படி அங்கே போன பிறகு கொஞ்சம் வெளிப்படையாகப் பேசிப் பழக்கம்!'

'இப்படிக்கூட துணிந்து கெட முடியுமா."

'கெடுவது எல்லாம் துணிந்து தான்' என்று சொன்னாள்.

'நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வீட்டில் கலியாணம் காட்சி எதுவுமில்லாமல் அப்படியே காலம் கடத்த முடியும் என்று நினைக்கிறீர்களா. என் பெற்றோர்கள் கைவிட்ட பிறகுதான் எனக்கு இந்தத் துணிச்சல் வந்து விட்டது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/30&oldid=1461938" இலிருந்து மீள்விக்கப்பட்டது