பக்கம்:அரை மனிதன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

29


 என்னால் இந்த உண்மையைக் கிரகித்துக் கொள்ள முடிய வில்லை.

'உங்களுக்குத் தெரியாது; இப்போது இந்த நாட்டிலே எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. இன்று எவ்வளவு பேர் ஆபீசுக்குப் போகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்று உங்க ளுக்குத் தெரியாது. அவர்கள் முகப்பவுடரும் சிகப்பு வாயும் அவர்களைப் பொலிவு உடையவர்களைப் போலக் காணச் செய்கிறது. அவர்கள் பலபேர் வாழ்க்கையில் வெறுப்பைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை."

"ஆமாம். நீ உன்னை வைத்துக் கொண்டு பேசுகிறாய். அவர்களுக்காவது தொழில் இருக்கிறது. உனக்கு? இது எவ்வளவு பெரிய தவறு?'

'தவறே இல்லை. நான் ஒருத்தி கெட்டுவிட்டதால் இந்த உலகமே கெட்டு விட்டது என்று நினைக்கக் கூடாது. இந்த ஆண்கள் கட்டுப்பாடாக வாழ முடியாது. அவர்கள் தவறும் செய்யக் கூடாது. பிறன் மனைவியை நெஞ்சாலும் கருதக் கூடாது. அக்கம் பக்கத்தில் யாரையும் கெடுக்கக் கூடாது மனைவி முரண்பாடு கொண்டாலும் அவளுக்கு அடிமையாக வேண்டும். அவள் இட்டது தான் பிச்சை. எவ்வளவோ சமூகச் சிக்கல்களை நாங்கள் தவிர்க்க முடிகிறது. யார் வந்தார்கள் எப்பொழுது வந்தார்கள்; ஏன் வந்தார்கள் என்ற கேள்விகளை நாங்கள் கேட்டதே இல்லை. அவர்களுக்கு வேண்டியது இந்த உடம்பு. அவர்கள் உழைப்பை நாங்கள் வாங்கிக் கொண்டு அவர்களிடம் பணமும் பெற்றுக் கொள்ளுகிற தொழில் ஒன்று இருக்கிறது என்றால் இதுதான். இதில் ஒன்றும் எங்களுக்குக் கஷ்டம் இல்லை. அவன் வெறிக்கு நாங்கள் இணங்குகிறோம். அவனிடத்தில் நாங்கள் அன்பு செலுத்துவதுபோல் நடிக்க வேண்டும். அவனை விரும்புவதாகச் சொல்ல வேண்டும். அதற்குக்கூட சிலபேர் காத்துக் கொண்டிருப்பது இல்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/31&oldid=1461939" இலிருந்து மீள்விக்கப்பட்டது