பக்கம்:அரை மனிதன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

35


 அவனோடு படித்தவனாம். யாரோ டாக்டர் அவனிடம் அழைத்துச் சென்றான்; அவன் அவ்வாறு "யார் இந்தக் கிழம்?" என்று கேட்டானாம். அவர் அழுக்குப் படிந்த ஆடை அவனை எண்ணச் செய்திருக்கிறது. அவருக்கு அவன் பிறக்க வில்லை என்பதை அறிந்தான். 'எங்க வீட்டு வேலையாள்' என்று நம்பும்படி அறிமுகம் செய்தான்.

"உங்களைப் போன்ற தாராள மனப்பான்மை இந்த நாட்டில் வளர வேண்டும். உண்மையிலேயே இந்த நாடு முன்னேறிவிடும். ஒரு தொழிலாளிக்காகத் தாங்கள் இவ்வளவு இரக்கம் காட்டுகிறீர்கள்" என்று தத்துவம் பேசினார். அந்த மருத்துவ நிபுணர்.

இறைவன் என் கால்களை எடுத்துக் கொண்டார். அதைப் போலவே என் அப்பாவின் காதுகளைச் செவிடாக ஆக்கியிருக்கக் கூடாதா? அதை அவரால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. 'தன்னை ஒரு தொழிலாளி' என்று குறிப்பிட்டதை அந்த முதலாளியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

"டே! என் மகனா நீ" என்று கேட்டார். அவர் சந்தேகத்தை அவன் தீர்த்து வைக்க நினைக்கவில்லை. மேலும் தொடர்ந்தார்.

"பெரியவரே சும்மா இருங்க இது ஆஸ்பத்திரி." என்றாள் அங்கிருந்த நர்சு.

"இது என்ன மனநோய் ஆஸ்பத்திரியா” என்று அப்பா அங்கிருந்தவர்களைக் கேட்டார்.

"இது வயிற்று நோய் ஆஸ்பத்திரி" என்று அங்கு வந்த மனநோயாளி ஒருவன் சொன்னான். அதாவது அங்கு வருகிறவர்கள் அந்த ஆஸ்பத்திரியின் சாப்பாட்டைச் சாப்பிட்டால் வயிற்று நோய் வரும் என்பது அவன் விளக்கம்.

அவன் கொஞ்சம் லூஸ்' என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் எதையும் மறைத்து வைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/37&oldid=1461945" இலிருந்து மீள்விக்கப்பட்டது