பக்கம்:அரை மனிதன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

49


 இதுவரை நாங்கள் பொது உடைமைவாதிகளாக இருந்தோம். தேவைக்கு மேல் சம்பாதிப்பதில்லை. சில சமயம் எந்த வேலையும் கிடைக்காதபோது எங்களில் பலர் பலவித மாக மாறிவிடுவதுண்டு. அதைப்பார்க்கும்பொழுது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.

சினிமா டிக்கெட் விற்பது முதல் பிக்பாக்கெட் வரை சில சமயம் இறங்கி விடுவது உண்டு. ரங்கன் இப்படி மாறுவான் என்று நாங்க்ள் எதிர்பார்க்கவில்லை. துணிந்து பல காரியங்களில் இறங்கி விடுவான். அவனைக் கண்டால் யாருக்குமே கொஞ்சம் பயம் தான். எடுத்தவுடன் அடித்து விடுவான். அதனாலேயே அவனுக்கு "ரவுடி" என்ற பெயர் அவனோடு சேர்ந்து விட்டது. ஆரம்பத்தில் கூலிவேலைக்கு வந்தவர்கள்தாம் அங்கு வேலை கிடைக்காதபோது இந்த மாதிரி தப்பான வேலைகளில் இறங்கி விட்டார்கள். அந்த நிலைமையில் எங்கள் கூடுகள் கலைக்கப்படும்.

போலீசுகாரர்கள் அடித்துத் துரத்தி விடுவார்கள். அப்பொழுதுதான் இந்த நகரம் எவ்வளவு பெரியது என்பதை எங்களால் உணர முடிகிறது. ரயிலடியே எங்களுக்குச் சாசுவதமாய் இருப்பதில்லை.

அப்பாவுக்கு எப்படியோ மணியார்டர் செய்து வந்தேன். அவள் 'மே' என் கதையைக் கேட்டு இருக்கிறாள். அவள் எனக்கு எப்படியும் உதவுவது என்று தீர்மானித்து விட்டாள். அதை என்னால் தடுக்க முடியவில்லை. என் தம்பியின் பெயரில் அவ்வப்பொழுது மணியார்டர் செய்து வந்தாள். அவள் தொழிலில் இறங்கி விட்டாள் என்று நினைப்பதைவிட வேறு விதமாக யூகித்துக் கொள்ள முடியவில்லை. இது எனக்குத் தெரியவே தெரியாது. பின்னால்தான் தெரிந்தது. இல்லாவிட்டால் அவளைக் கண்டித்து இருப்பேன்.

என் தம்பியைவிட அவள் எவ்வளவு உயர்ந்தவள் என்பதை அவ்வப்பொழுது நினைத்துக் கொள்வேன். அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/51&oldid=1461959" இலிருந்து மீள்விக்கப்பட்டது