பக்கம்:அரை மனிதன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ரா. சீனிவாசன்

51

விடுகிறார்கள். ’கேர் ஆஃப் பிளாட்பாம்’ என்று. அதன் அர்த்தம் என்ன? எங்களுக்கு முகவரி கிடையாது. போலீசுக்காரர்கள் எங்களை அவ்வப்பொழுது வேட்டையாடுவது சகஜம். எங்காவது ஏதாவது ஒரு கொலை நடந்தாலும் நாங்கள் சந்தேகப் பேர்வழிகள் ஆகிவிடுவோம். நாங்கள் எல்லோரும் அந்த நிலைக்குப் போவதில்லை. ஒரு ரங்கன் போதும். எங்களுக்கு இந்தப் பெயரை வாங்கிக் கொடுக்க. என் தலைமையைவிட அவன் தலைமையில்தான் இந்தக் கூட்டத்துக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. நான் அறிவு சொல்ல முடியும். அவர்களை ஒழுங்காக நடந்து கொள்ளச் சொல்ல முடியும். அது நான் கற்று வந்த பாடங்கள். என் பாடம் அவர்களுக்குச் சிலசமயம் ஒத்து வருவது இல்லை. இந்தச் சிகப்புத் தலைப் பாகை அண்ணன்கள் (அதுதான் சுமைதாங்கி நண்பர்கள்) எங்களைச் சிலசமயம் 'விரட்டி’ அடிப்பார்கள். அவர்களுக்கே கூலி கிடைக்காதபோது அவர்களுக்கு எங்களைக் கண்டால் வெறுப்பு வந்துவிடும். நான் மட்டும் அந்தக் காரைச் சுற்றிக் காவல் இருப்பேன். அது ஒரு சேவையாக அமைகிறது. அதாவது எங்கள் கூட்டமே அதில் கை வைத்துக் கொள்ளாமல் பார்க்கின்ற பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன், அவர்களுக்கு வண்டிக்குப் பத்து காசு தான் வாங்குவேன். அது ஒருவகையான கவுரவமான பிச்சை தான். அதற்கும் ஒரு சிலருக்கு மனம் வராது. சட்டம் பேசுவார்கள். எங்களுக்குப் பார்த்துக் கொள்ளத் தெரியும். நீ போ என்பார்கள். போலீசுகாரரை அழைப்பதாக மிரட்டுவார்கள். அவர்களுள்ளும் சின்ன மனம் படைத்தவர்கள் ஏராளம். பார்த்திருக்கிறேன். காசு அவர்களுக்குப் பெரிதல்ல. அது அவர்கள் தொழில் பழக்கம்; வாழ்க்கை நெறி. எதிலும் கச்சிதமாக இருந்து பழகியவர்கள். அம்மா அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். 'தம்பி’ அனுப்பி வைத்த எம்.ஒ. வரும்பொழுதெல்லாம் அவன் புகழை வாயாரப் பேசுவார்கள். அவன் வீட்டுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/53&oldid=1156767" இலிருந்து மீள்விக்கப்பட்டது