பக்கம்:அரை மனிதன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அரை மனிதன்



அவனை மிக விரைவில் கீழே கொண்டு வந்து விட்டாள். கீழ்த்தரமான உணர்ச்சிகளுக்கே ஆற்றல் அதிகம் என நினைக்கிறேன். அவற்றின் வேகம் உயர்ந்த எண்ணங்களுக்கு இருப்பதில்லை என நினைக்கிறேன்.

வரவர அந்தச் சூழ்நிலை பிடிக்கவில்லை. இந்தச் சூழ் நிலையைத் திருத்த முடியாது என்பதை உணர்ந்தேன். இவர்கள் உலகமே தனி உலகமாக அமைந்து விட்டது. ஏழைகளிடம் இரக்கம் காட்டுவது அவசியம்தான். இந்த உதிரிகளிடம் இரக்கம் காட்டுவது அவ்வளவு நல்லதாகப்படவில்லை.

இங்கே வாழ்பவர் அனைவரும் சந்தர்ப்பவாதிகளாகவே வாழ்கிறார்கள். அடிக்கடி இவர்களைச் 'சமூக விரோதிகள்' என்று பத்திரிகைகள் குறிப்பிடும். அதை நான் நன்றாகப் பார்க்க முடிந்தது. சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் பெரும்பாலோர் ஈடுபட்டனர்.

மறுபடியும் இந்த மத்திய தர ஒழுங்குகள் அளவுகள் எப்படியோ என்னைப் பிடித்துக் கொண்டன. நான் அயோக்கியர் மத்தியில் அகப்பட்டுக் கொண்டது போன்ற உணர்வு தோன்றியது.

திடீரென்று விபத்து ஒன்று ஏற்படுகிறது என்றால் அவர் களின் பார்வை அந்த ஆள் மீது செல்லாது. அவன் பாக்கட்டில்தான் செல்லும். முதலில் அதைப் பார்த்துவிட்டுப் பிறகுதான் வேடிக்கை பார்க்க ஒதுங்குவார்கள்.

இவர்களுள் பலபேர் கள்ளக் கடத்தல் கூட்டங்களுக்கு உதவி புரியச் சென்று விட்டார்கள். அவர்களே தலைவர் களும் ஆகிவிட்டார்கள். அவர்களுள் ஒரு சிலர் தொழிற் சங்கங்களின் தலைவர்களாக இருந்து கிளர்ச்சிகளை நடத்தி லாபம் அடைகிறார்கள். போலித் தலைவர்களாக இயங்கி நாட்டைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள். ஆரம்பத்தில் இவர்கள் மீது இரக்கம் இருந்தது. இப்பொழுது அது மறைந்து விட்டது. என்றாலும் நான் அம்மாகண்ணுவை வெறுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/66&oldid=1461963" இலிருந்து மீள்விக்கப்பட்டது