பக்கம்:அரை மனிதன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அரை மனிதன்


பிளந்த தன்மை இருந்தது. என் உள்ளத்தில் உறவுக்கும் இடம் பெற்றாள். இவள் என் பாசத்தில் இடம் பெற்றாள். இப்பொழுதுதான் புரிகிறது ஏன் அவளைத் தங்கையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது. எனக்கு என் உடன்பிறப்பு அதுதான் தங்கை என்ற ஒருத்தி பிறவாமல் இருந்தால் எனக்கு நிச்சயமாக ஒரு தங்கை தேவைப்படுவாள். அந்த இடத்தை இவளுக்குக் கொடுத்திருப்பேன்.

மற்றொன்றும் என்னை அவளைத் தங்கையாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. சில சமயம் முரண்பாடுகள் ஏற்பட்டால் உறவை அறுத்துக் கொள்வதைப் பார்த்திருக் கிறேன்.

"நீ என் மகன் அல்ல; நான் உன் அப்பன் இல்லை" என்று பேசக் கேட்டிருக்கிறேன். "இப்படி என் தந்தையும் தன் மகனைப் பார்த்துப் பேசியிருக்கிறார். அவனும் தனக்குத் தெரியாமலேயே அவரை ஒரு வேலைக்காரன் என்று அறி முகப்படுத்தி இருக்கிறான். இதற்குக் காரணம் என்ன? முரண்பாடுதான். அவருக்கும் என் தம்பிக்கும் ஏற்பட்ட முரண்பாடு என்ன? அவன் ஏணி வைத்து எட்டாத தூரத்தில் இருந்தான். அப்பா ஏணி வைத்துத் தூக்க முடியாத பள்ளத்தில் இருந்தார். இந்த ஏணிதான் இருவரையும் பிரித்தது. அவனுக்கும் தந்தை யிடம் பாசம் இருந்தது. இல்லாவிட்டால் அவன் அன்று வரத் தேவை இல்லை. கடைசி காலத்தில் மகன் கொள்ளி வைக்க வாவது வருகிறான் என்றால் அதற்குக் காரணம் என்ன? பாசம் தான். அதை அறுத்துக் கொள்வதற்கு அவன் வைக்கும் நெருப்புத் துணைச் செய்கிறது. பாசம் நீங்குகிறது. ஆனால் இன்னார் மகன் என்ற உறவு மட்டும் நிலைத்து இருக்கிறது. அவன் வசதிமிக்க வாழ்க்கை என்ற மாடியில் நிற்கிறான். அவர் வசதி என்றால் என்ன என்று அறிய முடியாத தொழிலாளியின் கூட்டத்தில் நிற்கிறார். இரண்டு பேருக்கும் உறவு உண்டாகுவ தற்கு வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது. உறவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/80&oldid=1461977" இலிருந்து மீள்விக்கப்பட்டது