பக்கம்:அரை மனிதன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

79


நிலைப்பது இல்லை. பாசம் வேறு; உறவு வேறு என்பதை என் தம்பியைக் கொண்டே நான் தெரிந்து கொள்ள முடிந்தது.

என் தம்பியிடம் எனக்குப் பாசம் இருந்தது. ஆனால் உறவு கொள்ள முடியவில்லை. அன்று என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டானே அது பாசத்தின் முத்திரை. அதை இன்னும் தடவிக் கொடுக்கிறேன். அவன் சின்னக் குழந்தையாக இருக்கும்பொழுது என்னையும் அறியாமல் அவன் கன்னத்தில் முத்தம் இட்டு இருக்கிறேன். அது பாசத்தின் அடையாளம். பொதுவாகச் சின்னப் பையன்களை முத்தம் இடுவதில்லை. இந்தப் பழக்கம் பெண்களிடத்தில்தான் இருக்கின்றது. ஆண்கள் அதை யாருக்கோ என்று ஒதுக்கிவிடுகிறார்கள். பெண்கள் அதைக் குழந்தைகளுக்காவே என்று ஒதுக்கி வைக்கிறார்கள். நான் அம்மாவைப் பார்த்து அந்த உணர்ச்சியில் ஒன்றி விட்டேன். நான் அப்பொழுது அந்த நேரத்தில் பெண்மையை அடைந்து விட்டேன். என் மனம் குழைந்தது. அவன் அவ்வளவு அழகாக இருந்தான். அதனால் அவனிடத்தில் மற்றவர்களுக்கு ஒரு கவர்ச்சி இருந்தது.

முரண்பாடு இருந்தால் உறவு முறிகிறது. ஆனால் பாசம் நிலைக்கிறது. இந்தப் பெண்ணோடு எனக்கு ஏற்பட்ட முரண்பாடு என்ன? அவள் நடத்தை முன்னால் தெரிந்ததுதானே? அவள் என் தம்பியிடம் நெக்லஸ் வாங்கும் அளவுக்கு அவள் அவனிடம் கொண்ட தொடர்பு எனக்குப் பிடிக்கவில்லை.

எனக்குத் தெரியும் அது ரங்கன் கொடுத்தது அல்ல; அவன் எங்கள் வீட்டு நெக்லசைத்தான் கொண்டு வந்து தர வேண்டும் என்ற அவசியம் என்ன இருக்கிறது. அது என்ன அவ்வளவு அவசியமா என்ன? பெண்கள் உடம்பை மூடி மறைப்பதற்கே இந்த நகைகள் எவ்வளவு உதவி செய்கிறது தெரியுமா. எங்காவது பொது இடங்களில் செல்லும்பொழுது மூடி மறைக்கிறார்கள். தன் மார்பில் இருப்பதைப் பார்க்காதவர்கள் பார்த்து விடுவார்களே என்பதற்காகத்தான். இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/81&oldid=1461978" இலிருந்து மீள்விக்கப்பட்டது