பக்கம்:அரை மனிதன்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

93



"அவர்களை எல்லாம் கண்காணிப்பது எங்கள் கடமை"

அது சரி அவர்கள் இனித் தோன்ற மாட்டார்கள். நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற்றுவிட்டது. இனி கம்யூனிசமும் ஜனநாயக அடிப்படையில் இந்த நாட்டில் கால் ஊன்றப் போகிறது இப்படியே மக்கள் பஞ்சம், பட்டினி, கொலை, திருடு இதிலேயே ஆழ்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறாயா? அரசாங்கம் ஏழ்மையை விரைவில் போக்க முயற்சி செய்கிறது."

"அந்த ஏழ்மை எங்கே இருக்கிறது என்று நினைக்க வேண்டும். அது இந்தப் பங்களாக்களில் தான் இருக்கிறது. அவர்கள் அறிவில் ஏழ்மை குடி கொண்டிருக்கிறது. அதை முதலில் போக்க வேண்டும்.”

"ஏழையாகப் பிறப்பது குற்றம் என்று எவனோ சொன்னானாம். அது ஏழ்மையே இல்லாத நாட்டில் பேசிய பேச்சு. தேவைக்குமேல் சம்பாதிப்பது குற்றம். அந்த நோய்தான் இந்த மேல் மட்டத்தில் மிகுதியாகப் பரவிக் கிடக்கிறது. இதை இவர்கள் உணரவேண்டும்.”

“தேவை இருந்தால் தவறு செய்யலாம். தேவையே இல்லாமல் தவறு செய்கின்றவர்களால் தான் இந்த நாட்டின் நல்வாழ்வு பாதிக்கப்படுகிறது. லட்சம் லட்சமாக லஞ்சமும் ஊழலும் நடத்தினார்களே அவர்கள் ஏழைகளா? அந்தப் பணம் அவர்களுக்குத் தேவை இல்லை. அவர்கள்தான் குற்றவாளிகள்."

"எங்கள் கூட்டத்தைக் குறிப்பிட்டாயே அவர்கள் தேவைக்குமேல் எப்பொழுதுமே திருடியதில்லை. தேவைக்கு மேல் தவறு செய்யவே மாட்டார்கள். இந்த நெக்லஸ் எங்களுக்குத் தேவையில்லை. இதை ஏன் நாங்கள் திருடப் போகிறோம். இது திருடியது அல்ல."

"களவு போன நெக்லஸ் அது. அது உன் கையில் இருக்கிறது. அந்த அம்மாவுக்குத் தெரியாமல் யாரோ எடுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/95&oldid=1461992" இலிருந்து மீள்விக்கப்பட்டது