பக்கம்:அரை மனிதன்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ரா.சீனிவாசன்

95



நெக்லஸ் கொண்டு வருவதாக உறுதி கூறி இருந்தான். அவன் அந்தப் பக்கமாக நோட்டம் விட்டான்.

போலீசு ஜீப்பு அங்கு இருப்பதைக் கண்டான். நான் அவர்கள் மத்தியில் விசாரிப்பதைப் பார்த்தான். நான் நெக்லஸ் திருடியதாக அவனுக்கு யாரோ அங்கே சொன்னார்கள்.

அவன் வேறு விதமாக நினைக்கத் தொடங்கினான். நானும் நெக்லஸ் திருடி அதை அவளுக்குக் கொடுத்து நிலைத்த வாழ்வை ஏற்படுத்திக் கொள்ள முயன்றாதாக நினைத்தான்.

அவனால் இந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முடிய வில்லை. அவன் என்னிடம் நெருங்கினான்.

அவனைப் பார்த்ததும், அவனை அழைத்துப் பேச வேண்டும் என்று நினைத்தேன். அவனிடம் பேச வேண்டும் என்று கூறினேன். போலீசார் அனுமதித்தார்கள்.

"ரங்கன்! இந்த நாட்டில் திருடர்களைக் கண்டுபிடிப்பது இல்லை. திருடப்பட்ட பொருளை வைத்துத்தான் ஆட்களைப் பிடிக்கிறார்கள்" என்றேன்.

"அதுதான் பார்த்தேன். உனக்கு எப்படி இந்தப் புத்தி வந்தது என்று"

"இதைத் திருடிய ஆள் கிடைக்கிற வரை நான்தான் திருடன்."

"அவன் கிடைப்பான் என்று நம்புகிறாயா?”

"அவ்வளவு துணிவு அவனுக்கு எப்படி வரும்; வர மாட்டான். நான் அவனுக்காகச் சிறை ஏற்கத் தயார் செய்து கொள்ளவேண்டியதுதான்."

"ஒருவேளை அவனே வந்து ஒப்புக் கொண்டால்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/97&oldid=1461994" இலிருந்து மீள்விக்கப்பட்டது