பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 む ஆன்மா அடையும் பயன்கள் கொண்ட தளியுருவனான எந்தை தந்தை தந்தைக்கு எல்லையில்லாத காலமெல்லாம் எல்லாவிடத்திலும் உடனிருந்து ஒன்றும் குறையாதபடி எல்லா அடிமை களையும் நாம் செய்ய வேண்டும். (1) நித்திய சூரிகள் சேனை முதலியாரோடும் வந்து துரவி வணங்குகின்ற பூக்கள் வாசனை வீசுகின்ற திருவேங்கடத் தில் எழுந்தருளியிருக்கின்ற, முடிவில்லாத புகழையுடைய, நிலமேகம் போன்ற அழகையுடைய அண்ணல் என் குலத்திற்கு முதல்வனாவான். (2) பெருமையுடையவன், ஆச்சரியமான குணங்களையும் செயல்களைமுடையவன், அழகினைக் கொண்ட செந்தாமரையைப் போன்ற திருக்கண்களையுடையவன், சில்ந்த கனி போன்ற திருவதரத்தையும் கரிய மாணிக்கம் போன்ற வடிவினையுமுடையவன், தெளிந்த நிறைந்த தண்ணிரையுடைய சுனைகள் பொருந்திய திருவேங்கடத் தில் எழுந்தருளியிருக்கின்ற அளவிடற்கரிய இயற்கையில் அமைந்த புகழையுடைய, நித்தியசூரிகட்குத் தலை வனாவான். (3) தாழ்ந்தவனாய் குணங்கள் சிறிதும் இல்லாதவனான யான் இறைவனைப் பார்த்து தித்தியசூரிகட்குத் தலைவன் என்று சொல்லுவேன்; அப்படிச் சொன்னால் அஃது என்னிடத்தில் அன்பை வைத்த மேலான சுடரையுடைய ஒளியுருவனான திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்மானுக்குப் புகழாகுமோ? ஆகாது. (4) வேதங்களையறிந்த அந்தணர்களுடைய எல்லா வேதங்களாலும் சொல்லிப்படுகின்ற அமிழ்தம் போன்ற இனிமையையுடையவனை, குற்றமற்ற புகழையுடைய திரு