பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அர்த்த பஞ்சகம் தண்ணியோமான எங்களுடைய இந்த தனிமை ஒழிக; ஒழிய வேண்டும். (3) கோவிந்தா! அடி ச்சி யோமா கி ய எங்களுடைய தனிமையையும் துணையாகிய உன்னைப் பிரிந்தவர் களுடைய துன்பத்தையும் நினைக்கின்றிலை; தொழுவத் திலே உள்ள உன்னுடைய பசுக்களையே விரும்பி எம்மைத் துறந்துபோய் அப்பசுக்களை மேய்ப்பதற்காகப் போகின் றாய்; பக்குவமான சிறந்த அமுதினுடைய இனிய காற்றின் வெள்ளமானது பாவியேனாகிய என்னுடைய மனத்தின் இடந்தோறும் புகுந்து அழுந்த, நினது சிவந்த கனி போன்ற திருவாயில் நின்றும் வருகின்ற வஞ்சகமான தாழ்ந்த வார்த்தைகளை நினையுந்தோறும் உயிர் வேகின் திறது. - (4) பகல் காலம் எல்லாம் பசுக் கூட்டங்களை மேய்ப்பதற். காகச் சென்ற கண்ணபிரானே! உன்னாலே பணிவோடு பேசப் பெறுகின்ற வார்த்தைகளை நினைக்கும்போதெல் லாம் உயிரானது வேகின்றது; அரும்புகள் மலர்கின்ற மல்லிகை மலர்களின் மணத்தை வாடைக் காற்று வீகம். போக்கில் மாலைக் காலமும் வந்தது; கெளத்துவம் என் னும் இரத்தினம் அலங்கரிக்கின்ற திருமார்பில் அணிந் துள்ள முல்லை மலர்களின் மணத்தினால் என்னுடைய அழகிய முலைகள் வாசனை வீசும்படியாகச் செய்து, உன் வாயிலே உள்ள அமுதத்தைக் கொடுத்து, அழகு மிகுந்த தாமரை போன்ற திருக்கரத்தை உன் அடியவர் களான எங்களின் தலைமேலே நீ அணிய வேண்டும். (5) உனக்கு அடியவர்களாகிய எங்களுடைய தலையின் மீது உன் கையினை நீ அணிய வேண்டும்; கடல் போன்று. விடாய் நீக்கவல்ல அழகிய திருக் கண்களை உடையவனே! நீ பசு மேய்க்கப் போகின்ற செயலுக்கு நடுவில், நின் அழகிய திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொண்ட,