84 அர்த்த பஞ்சகம் உன்னால் விருப்பப் படுகின்ற தளர்கின்ற நுட்பமான இடையையுடைய இளமை பொருந்திய ஆய்ச்சியராகிய பெண்களோடும் சஞ்சரித்துக் கொண்டு இவ்விடத்திலேயே இருப்பாயாக. (8) உன்னாலே விரும்பப்படும் பெண்களோடும் கூடிச் சஞ்சரிப்பதனால் நின் திருவுள்ளத்தில் உண்டாகும் துன்பம் நீங்கி நீ இன்பம் அடையும் போதெல்லாம் நாங்கள் உகப்பு உடையோம் ஆவோம்; அதற்குக் காரணம், நீ பிறரைக் காதலிக்கும்போது பொறாமைப் படும் பெண்மையை உடையோம் அல்லோம்; ஆதலால் எம்பெருமானே! நீ ஆநிரை மேய்ப்பதற்குச் செல்லற்க; அதற்கு மேலே கம்ச னுடைய ஏவலை மேற்கொண்டு பல அசுரர்கள் நீ விரும்பும் உருவங்களைக் கொண்டு மிக அதிகமாகத் திரிவர்; அவர் கள் கைகளிறே அகப்பட்டால் அவ்விடத்தில் அவர்கட்கும் நினக்கும் மிகத் தீய போர்கள் விளையும்; என்னுடைய சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அந்தோ! நின் பராமுகம் இருந்தபடி என்னே! (9) சிவந்த கொவ்வைக் கனிபோன்ற திருப்பவளத்தை யுடைய எங்கள் ஆயர் தேவே! வலிய கையினையுடைய வரான அசுரர்கள் கம்சனாலே ஏவப்பெற்றவர்களாய், தவத்தைச் செய்கின்றவர்களான முனிவர்கள் மனம் கலங் கும்படிச் சஞ்சரிப்பார்கள்; நீயும் எப்பொழுதும் தன்னந் தனியனாக உள்ளாய்; பலராமனையும் விரும்புகின்றாய் இல்லை. அவனோடு கூடத் திரிவதும் செய்வதில்லை; இந் நிலையில், தீமைகள் உண்டாகும் என்று பலகாலும் நினைத்து என் மனம் உள்ளுற வேகின்றது; ஐயகோ என் னுடைய சொற்களைக் கேட்க வேண்டும்; பரமபதத்தில் இருக்கும் இருப்பைக் காட்டிலும் பசுக்களை மேய்க்கும் செயலையே நீ உகக்கின்றாய். (10)
பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/111
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
