பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I00 அர்த்த பஞ்சகம் இந்த பிரபத்தி நெறியிலும் ஐந்து அங்கங்கள் இருப் பதாகக் காட்டுவர் ஆசாரியப் பெருமக்கள். முதலாவது: ஆது கூல்ய சங்கற்பம் என்பது, எம்பெருமான் திருவுள்ளத் திற்கு உகந்தவற்றைச் செய்வதாக உறுதி கொள்ளலாகும். இரண்டாவது: பிராதிகூல்யவர்ஜனம் என்பது, அவன் திருவுள்ளத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யாதிருக்க உறுதி கொள்ளல்; அல்லது அவற்றைச் செய்ய எண்ணம் .ெ கா ன் ளா ைம ; அ ல் ல து அவற்றைச் செய்யாது விடுதலாகும். மூன்றாவது: மகா விசுவாசம் என்பது, அவன் நம்மைக் காக்க வல்லவன் என்று தேறி, தவறாது நம்மைக் காப்பான் என்று உறுதியாக நம்புதலாகும். நான்காவது: கோபத்ருவரணம் என்பது, பக்தியோகம் முதலிய உபாயங்களை அதுட்டிக்க ஆற்றலற்ற தம்மிடம் அருள் புரிந்து அவ்வுபாயங்களின் இடத்தில் நின்று பலன் தருமாறு அவனை வேண்டுகையாகும். ஐந்தாவது: கார்ப் பண்யம் என்பது, பக்தியோகம் முதலிய உபாயங்களில் தமக்கு அதிகாரம் இல்லாமையும், எம்பெருமானைத் தவிர வேறு தெய்வத்தினிடமோ வீடு பேற்றைத் தவிர, வேறு பலனிலோ பற்றில்லாமையை அநுசந்தித்தல்; அல்லது இவ்லதுசந்தானத்தால் முன் நமக்கு இருந்த முனைப்பு ஒழியப் பெறுதல்; அல்லது எம்பெருமானின் கருணை தம்மீது வளர்ந்தோங்கும்படி தாழ்ந்து நின்று அஞ்சலில் முதலியவற்றைச் செய்தல். இந்தப் பிரபத்தியைக் குறித்த பலனுக்காக ஒருமுறை அதுட்டித்தால் விரும்பிய பலனை நினைத்த காலத்தில் பெறலாம். ஒரே பலனுக்காக இதனை இருமுறை அநுடித்தல் ஆகாது. 6. அஞ்சலிகைகளைக் கூப்புதல். அம்-ஜவயதி - அஞ்சலி. எம்பெருமானை நீர்ப் பண்டமாக உருகச் செய்தலால் இதற்கு இப் பெயர் வந்தது. இஃது ஒர் அடையாளமாகும்.