பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அர்த்த பஞ்சகம் பரமபதத்தில் நின்றும் வந்து என் நெஞ்சினை இட மாக்கிக் கொண்ட வானவர் கொழுந்தே! இந்த உலகங் கட்கு ஒப்பற்ற பழைமையான தாயும் தந்தையுமான வனே! எல்லா உலகங்களையும் பிரளய காலத்தில் உண்டவனே! பயன் கருதாத கைங்கரியத்தையுடைய சிரீவைணவர்களுடைய வேத ஒலியும் யாகங்களும் நீங்காமல் இருக்கின்ற சி.ரீவரமங்கல நகரிலே எழுந் தருளியிருக்கின்ற எல்லையில்லாத புகழையுடையவனே! உனக்கு அடிமைப்பட்டுள்ள அடியேனை நீக்காமல் இருக்க வேண்டும். (7) உன்பக்கல் அன்பு இல்லாதாரை அகற்றுவதற்காக உன்னாலே உண்டாக்கி வைக்கப்பட்ட வஞ்சனை பொருந்திய கொடிய ஐந்து இந்திரியங்களை உள்ள வாறு அறிந்தேன்; அவற்றின் தன்மையை அறிந்திருக் கின்ற என்னையும் நீக்கி கரையேற அரிதான விஷயங்க ளான சேற்றிலே தள்ளி விடுவாயோ என்று அஞ்சுகின் றேன்; மிக்க ஒளியையுடைய மாணிக்கங்கள் பதித்த உயர்ந்த மாடங்களையுடைய சிரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்தில் நித்தியவாசம் செய்கின்றவனே! என்றும் பேசுவதற்கு அரிய எந்தையே! பகாசுரனுடைய வாயைப் பிளந்தவனே! (8) பகாசுரனுடைய வாயினைப் பிளந்தவனே! மருத மரங்களின் நடுவே போனவனே! இடபங்கள் ஏழனையும் கொன்ற என் கள்ளமாயனே! கரியமாணிக்கத்தின் சுடரே! திருநான்மறைகளிலும் வல்லவர்களான தெளித்த ஞானமுடைய சிரீவைணவர்கள் நிறைந்து வசிக்கின்ற குளிர்ந்த சிரீவர மங்கை என்னும் திவ்விய தேசத்திற்குள் எழுந்தருளியிருக்கின்ற எந்தையே! எனக்கு உய்யும் வகையை அருள வேண்டும். (9)