பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
x

10. களிப்புறுவோம் நாமிங்கே
காண்கின்றோம் கனிவோடு
சுளிக்கின்றோம் இவரகவை
எண்பதெனச் சொன்னாலும்
அளிக்கின்றார் தாத்தாவாய்
ஆழ்வார்கள் அநுபவத்தை
விளக்கமாய் அர்த்தபஞ்
சகத்தில் ஆழ்த்திவிட்டார்.

11. ஆழ்வார்கள் ஆழங்கால்
பட்டதெல்லாம் அளந்துரைக்கும்
வாழ்வாக அருங்கலைக்கோன்
வந்துதித்தார் வாழ்க! எனச்
சூழ்வோம் அவர்புகழைச்
சொல்வோம் சுவைத்திடுவோம்
வாழ்வோம் ஆயிரத்தில்
இவரொருவர் தாம்என்றே!

12. ஆயிரத்தில் ஒருவராய்த்
தோன்றினார் அவருடைய
பாயிரத்தைப் பகர்கின்றேன்
பாமாலை சூட்டுகின்றேன்
தாயிரக்கம் பெற்றவர்தம்
தகைமையிது ஆதலினால்
நீவிரெலாம் கேட்டிடுவீர்
எனநினைந்து நீட்டுகின்றேன்

13. நீட்டுகின்றேன் வைணவத்தின்
நிகழ்விங்கு நிலவிடவே
கேட்டுவக்க வந்துள்ளோம்
கிளரிளமை செழித்திடவே