பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
XIV

அப்படியே சமூகம் முழுவதையும் காக்கும் பொதுப் பேற்கும் போது இறைவன் அவதரிக்கின்றான். அதாவது மனிதர்களிடையே இறங்கி வருகின்றான்.

மனிதன் தன் நலத்தையே சரிவரத் தெரிந்து கொள்ளாத போது, கருதாத போது, அவன் பிறர் நலத்தை எப்படிக் கருதமுடியும்? இவ்வளவு ஆசாபாசங்களுடன், காமக் குரோதாதிகளுடன் அவன் எப்படிப் பொறுக்க முடியும்? ஒரு கதை நினைவுக்கு வருகின்றது. கடவுள் ஒரு பக்தன் முன் தோன்றி, 'பக்தனே! உன் தவத்தை மெச்சினேன்; என்ன வரம் வேண்டுமோ, கேள்; தருகிறேன். ஆனால் ஒன்று, உனக்களிக்கும் பலனில் இரண்டு மடங்கு உன் பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கொடுப்பேன். யோசித்துச் சொல்' என்றார். 'தனக்கு ஒரு பொருள் கிடைப்பதை விட, பிறருக்கு அது கிடைக்க வொட்டாமல் செய்வ தல்லவா முக்கியம்?' என்று யோசித்து, கடைசியில் ஒரு வரம் கேட்டான், “கடவுளே! எனது ஒரு கண்ணைப் போக்கி விடுக' என்று. தனது ஒரு கண்ணை இழந்தாவது மற்றவனுடைய இரண்டு கண்களையும் போக்கி இன்புறும் நல்லெண்ணம்! மற்றும் புண்ணிய பாவங்களைப் பற்றியெல்லாம் நிறையக் கேட்டறிகின்றோம். ஆனால் நடை முறையில்! ”மாந்தர்கள் புண்ணியத்தை விரும்புகிறார்கள்; அதனை அடைய வழிகோலும் செயல்களைச் செய்ய விரும்புவதில்லை. அதாவது முதலீடும் உழைப்பும் இல்லாமலே இலாபம் வேண்டும்! அதேபோல் பாவத்தை விரும்புவதில்லை; ஆனால் பாவச் செயல்களை விலக்கு கிறார்களில்லை."

பதினெண் புராணங்களில் சிவன், விஷ்ணு, சூரியன் என்றிப்படிக் கடவுளர்களைப் பற்றி வருணிக்கப் பெற்றிருக்கின்றது. அவற்றுள் ஒன்றான கருட புராணத்தில் இறந்த மனிதனுடைய ஆவி எங்கெங்குச் செல்லுகிறது? அவனது புண்ணிய பாவங்களுக்கேற்ப என்னென்ன கதியை அடைகின்றது? என்றெல்லாம் விவரிக்கப் பெற்