6
அர்த்த பஞ்சகம்
4. ஆன்மா அப்பயனை அடைவதற்குரிய வழிகள் என்பன: கர்மம், ஞானம், பக்தி, பிரபத்தி, ஆசார்ய அபிமானம் என்று ஐந்து.
5. அப்பயனை அடைவதற்குரிய தடையாய் (விரோதிகளாய்) உள்ளவைகள் என்பன: அவை சொரூபவிரோதி பரத்துவ விரோதி, புருஷார்த்த விரோதி, உபாய விரோதி, பிராப்தி விரோதி என்ற ஐந்து.
பராசரபட்டர் என்ற ஆசாரியப் பெருமகனார்.
மிக்க இறைநிலையும்
மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும்
தடையாகித் - தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும்
ஒதும் குருகையர்கோன்
யாழின் இசை வேதத்து
இயல்.
-திருவாய்மொழி தனியவன்
என்று விளக்குபவர். இதில் மிக்க இறைநிலை என்பது ஈசுவரனின் இயல்பு, (2) மெய்யாம் உயர் நிலை என்பது, ஆன்மசொரூபம், (3) தக்கநெறி என்பது உபாய சொரூபம், (4) தடையாகின்ற தொக்கியலும் ஊழ்வினையும் என்பது விரோதி சொரூபம்,(5) வாழ்வினையும் என்பது வீடுபேற்றின் தன்மை. ஆக, இத்தனியன் அர்த்த பஞ்சகத்தைக் கூறுவதாகின்றது.
இதனைச் சற்று விளக்கிக் கூறுவோம். ஸ்ரீமன் நாராயணனே அறப் பெரிய முதல்வன்; ஆன்மாவிற்குச் சொரூபம் அடியேன் என்பதே சரணாகதி இறைவனைப் பெறுவதற்கு உரிய வழி; 'பொய்ந்நின்ற ஞானமும்