ஈசுவரன் எல்லாக் குற்றங்கட்கும் எதிர்த்தட்டாய் இருப்பவன். அஃதாவது இருளுக்கு ஒளி போலவும், பாம்புக்குக் கருடனைப் போலவும் திகழ்பவன். மூன்று வித அசித்தினுடைய பரிணாம ரூபமான வேறுபாட்டின் குறைகள் (விகார தோஷங்கள்) தட்டாதவன். பக்தருடைய அஞ்ஞான துக்கங்களுக்கும், முக்தருடைய சம்சார சம்பத்தத்திலிருந்து விடப்பெற்ற ஆகாரத்திற்கும். நித்தியருடைய அளவுபட்ட சொரூபத்துவ, பாரதந்தியங்களாகின்ற தோஷங்களுக்கும் மாறாக இருப்பவன். அல்லது தன்னை அடைந்தாருடைய தோஷங்களை நசிப்பிப்பவன்.
இடத்தாலும் காலத்தாலும் பொருளாலும் அளவு படுத்தப் பெறாதவன். அந்தமில் ஆதி அம் பகவன்' (திருவாய் 3:8). எங்கும் நிறைந்திருப்பவன். அஃதாவது இன்ன காலத்தில் உள்ளான், இன்ன காலத்தில் இல்லான் என்கிற கால அளவு இல்லாத நித்தியன்; இன்ன இடத்தில் உள்ளான் இன்ன இடத்தில் இல்லான் என்கின்ற இடஅளவு இல்லாமல் எல்லா சேதந அசேதநங்கட்கும் வியாபகனாய் இருப்பவன்; எல்லாவற்றிற்கும் உள்ளிருப் பவனாய் தனக்குள் ஒன்று இருப்பதொன்றின்றி இருப்பதனால் இன்ன பொருளைப் போல் இருப்பான் என்று கூற முடியாமல் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பவன். உடல்மிசை 'உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்'
____________________________________
1. சுத்த சத்துவம், மிச்ர தத்துவம், சத்துவசூனியம். என்ற மூன்று.