பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அர்த்த பஞ்சகம்


விபூதியையும் தேவிமார் மூவருடன் இருந்து கொண்டு அரசாள்கின்றான் என்பர்.

திருக்குணங்களின் ஊற்றுவாய் : மேற்சுட்டப்பெற்ற எம்பெருமானின் திருக்குணங்கட்கு ஊற்றுவாயாக இருப்பவை ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜசு என்பனவாகும்.

1. ஞானம் : எல்லாவற்றையும் எல்லாக் காலத்தும் அறியப் பயன்படுபவை.

2. சக்தி : அகடிதகடினா சாமர்த்தியம்; செயற்கரிய செயல்களையெல்லாம் செய்விப்பது

3. பலம் : எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல்.

4. ஐசுவரியம் : உள்ளிருந்து நியமிப்பது: எல்லா வற்றையும் ஏவும் ஆண்மை.

5. வீரியம் : நிலைமையில் வே று பாடுகள் தட்டாமல் ஒரே பாங்காக இருப்பது.

6. தேஜசு : பிறர் நெருங்க இயலாத தன்மை.

இந்த ஆறு ஊற்றுவாய்களாலும் அவன் (எம்பெருமான்) அலங்கரிக்கப் பெற்றிருப்பவன். இவை அவனிடம் ஆதல், அழித்தல் இன்றி எப்பொழுதும் நிறைந்திருக்கும். இவை தவிர செளரியாதி பராக்கிரமங்கள் முதலியனவுமான எண்ணற்ற கல்யாண குணங்களையும் உடையவன். இவை ஒவ்வொன்றும் முடிவற்று எல்லை காண வொண்ணாதவை; தாழ்ந்த பண்புகள் இல்லாதவை. இவற்றுள் வாத்சல்யம் முதலியவை தன்னை அடைந்தவர்கட்குப் பயன்படுபவை. செளரியாதி பராக்கிரமங்கள் தன்னை அடைந்தவர்களின்