பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈசுவரனின் இயல்பு

13


விரோதிகளின் பொருட்டுப் பயன்படுபவை. மற்றும் ஞானம் முதலியவை எல்லோருக்கும் பயன்படுபவை.

திவ்விய மங்கள விக்கிரகம் : இறைவனுக்கு உருவம் உண்டு. அந்த உருவம் ஈடும் எடுப்புமற்ற பேரொளியினையுடையது; பேரழகு வாய்ந்து; கண்டாரை ஈர்ப்பது யோகியரின் தீயானத்திற்கு ஏற்றது. இந்தத் திருமேனியின் வைலட்சண்யம் சொற்களால் விளக்க வொண்ணாதது. இதற்கு உற்பத்தியாதல், நசித்தல், வளர்தல், குறைதல் முதலிய விகாரங்கள் இல்லை. இஃது இராஜச தாமச குண சம்பந்தம் இல்லாத சுத்த சத்துவ குணத்திற்கு இடமாயுள்ள அப்ராக்ருத திரவியமே வடிவாய்க் கொண்டது. ஞானமயமான, அதாவது ஒளி வடிவமான, சொரூபத்தை வெளியில் தோன்றாதபடி மறைக்காமல் திவ்வியாத்தும் சொரூபத்திற்கு விளக்கமாய் இருப்பது. மின்மினியைக் காட்டிலும் சூரியனது ஒளி மிக்கிருத்தல் போல, நித்திய முக்தர்களின் திருமேனியின் ஒளியைக் காட்டிலும் எல்லையற்ற பேரொளி வடிவாய் இருப்பது. செளகுமார்யம், செளந்தர்யம், லாவண்யம், செளகந்தியம், யெளவனம் முதலான கல்யாணகுணக் கூட்டத்திற்கு கொள்கலமாய் இருப்பது. எப்போதும் பரமயோகியரின் தியானத்திற்கு உரியதாய் இருப்பது; அவர்களால் தியானிக்கப்படுவது. ஞானி, அஞ்ஞானி என்ற வேறுபாடின்றி எல்லாரையும் தன் அழகாலே பிச்சேற்ற வல்லது. தன் அழகைக் கண்டவர்கட்கு மற்றைய நுகர்ச்சியில் ஆசையின்மையை விளைவிக்கக் கடவது[1]. நித்தியராலும் முக்த ராலும் அநுபவிக்கப்படுவது. திவ்விய அவயவங்களும் திருமேனியுமான சேர்த்தியாலே தாமரை பூத்துப் பரிமளம்


  1. மேல்கோட்டையில் (கர்நாடக மாநிலம்) இருக்கும் செல்வப்பிள்ளையை நினைப்பது. இதன் அழகைக் கண்டுதாண் தில்லித் துருக்க அரசரின் மகள் இதனைக் கவர்ந்து சென்றாள். இராமாநுசர் காலத்தில் அது மீட்கப்பட்டது.