பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈசுவரனின் இயல்பு

17


கொண்டிருக்க நேரிடும்போது பாதுகையாகி இருந்து பணியாற்றுவான்; திருப்பாற்கடலில் திருக்கண் வளர்தருளும்போது திருப்பள்ளி மெத்தையாகயிருப்பான்; ஏதேனும் 'ஒன்றை விளக்குக்கொண்டு காண அவன் விரும்பும்போது அவன் திருவிளக்காகச் செயல்படுவான்; சாத்திக்கொள்ளும்படி விரும்பினபோது அவன் திருப்பரி வட்டமாகச் செயற்படுவான்; சாய்ந்தருளும்போது தழுவிக்கொள்ளுவதற்குத் தலையாணையாகவும் இருப்பான். இறையநுவம் பெறுவதற்குப் பல வாய்களையும், பல தலை களையுமுடையவன். குளிர்ச்சி மென்மை, நறுமணம் முதலியவற்றுக்குக் கொள்கலம் ஆனவன்.

அந்த ஆதிசேடனாகிய அரவணையில், வெள்ளிமலையின் உச்சியில் பலகோடி சூரியர்கள் உதித்தாற்போல் விளங்குகின்ற ஆயிரம் பணா மண்டலமாகிய சோதி மண்டலத்தின் அடியிலேயே இறைவன் இருப்பான். வலப் பக்கம் அருள் தேவியாரான பெரிய பிராட்டியாரும், இடப்பக்கம் புறை தேவியாரான பூமிபிராட்டியாரும், அவர்களுக்குடையே இன்ப தேவியரான நீளா தேவியாரும் இருப்பர். அவர்களுடனே மூன்று மின்னல் கொடி களோடு கூடிய கார்முகில் தாமரை காடு பூத்து ஒரு வெள்ளிமலைமேல் படிந்ததுபோல் திவ்விய படைக் கலன்கள், திவ்விய அணிகலன்கள் பூண்டு, அழகும், இளமையும் "மனம் கமழ் தெய்வத்து இளம் நலம் விளங்க' அடியார்களின் அனைத்துத் தாபங்களும் ஆறும் படியாகச் சுழிப்பட்டோடும் சுடர் சோதி வெள்ளத்துத் தோன்றும் ஆதியம்சோதி கரியகோல திருவுருவத் தோடு நித்தியர், முத்தர், அநுபவிக்கும்படியாக எழுந் தருளியிருக்கும் பரவாசுதேவன் நிலையே பரத்துவநிலையாகும்.

2. வியூகம் : இந்த உலகில் (லீலா விபூதியில்) அதன் படைப்பு, அளிப்பு, அழிப்பு இவற்றை நடைபெறச் செய்வ

அ.-2