பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுவரனின் இயல்பு

23


மகா இலக்குமிப் பிராட்டியாருடன் குளிர நோக்கி வாழ்வன். பிடரியில் தாமோதரன் இந்திர கோபம் போன்ற ஒளியுடன் நான்கு கைகளில் பாசாயுதபாணியாய் சர்வலோக சுந்தரிப் (சர்வாங்க சுந்தரி) பிராட்டியாரோடு எழுந்தளியிருந்து காத்தருள்வன்.

3. விபவம் : விபவ அவதாரங்கள் எண்ணிறந்தவை. அவை முக்கிய அவதாரம் அல்லது சாட்சாத் அவதாரம் என்றும், கெளணாவதாரம் அல்லது ஆவேசாவதாரம் என்றும் இரண்டு வகையாகப் பிரிவுபடும். முக்கிய அவதாரம் தேவ, மனித, விலங்கு (திர்யக்கு) என்று உட்பிரிவுகளாகும். தேவதாவதாரங்களில் விஷ்ணு, உபேந்திரன், திரிவிக்கிரமன் என்பனவும் இன்னும் பலவும் அடங்கும். மனிதாவதாரங்கள் என்பன நாராயண, இராம, கிருட்டிணாவதாரங்களாகும். விலங்கு (திர்யக்கு) அவதாரங்களில் அயக்ரீவம், மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம் முதலியவை அடங்கும். தாவர அவதாரம் நைமிசாரணியத்தில் குட்டை மாமரமாய் (குபஜாம்பரம்) அவதரித்த தாகும். இவை யாவும் பகவானது இச்சையாலே வந்தவை. இவை 'ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த'4 வை யாதலின், பிறப்பு இறப்பு அற்றவனான இறைவனது தன்மைகளைக் கொண்டவை. ஆகவே இவை முமுட்சுகளுக்கு உபாசிக்கத் தக்கவை. எனவே இவ்வவதாரம் ஒரு செயல்நிமித்தம் ஆன்மாக்களிடத்து ஆவேசித்ததாகும். அது சொரூப ஆவேசம், சக்தி ஆவேசம் என்று இரு வகைப்படும். முதல் வகையில் பரசுராம, பலராம அவதாரங்களும், இரண்டாவது வகையில் நான் முகன், சிவன், அக்கினி, வியாசன், குபேரன் முதலான ஆன் மாக்களில் சக்தியை அதிட்டிப்பித்து நிற்கின்ற அவதாரங் களும் அடங்கும். இவை முமுட்சுகளுக்கு உபதேசிக்கத் தகாதவை. ஆனால், போகத்தில் இச்சையுடைய புபூட்சுகளுக்கு


4. திருவாய். 3.5:6