பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈசுவரனின் இயல்பு

25


களகரமான திருமேனியுடன் எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவனாய், பெரிய பிராட்டியாரோடு கட்டைவிரல் அளவாக ஒவ்வொருவர் இதய கமலத்துக் குள்ளே எழுந்தருளியிருக்கும் இருப்பே இந்நிலையாகும். இந்நிலையை ஆழ்வார்,

யான்ஒட்டி என்னுள்
இருத்துவன் என்றிலன்
தான்ஒட்டி வந்துஎன்
தனிநெஞ்சை வஞ்சித்து
ஊன்ஒட்டி நின்றுஎன்
உயிரில் கலந்து

- திருவாய் 1.7:7

என்றும்,

யாது அவங்களும் சேர்கொடேன் என்று
என்னுள் புகுந்திருக்து
தீதுஅவம் கெடுக்கும் அமுதம்

- திருவாய் 2.7:1

என்றும்,

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழிஏந்தி
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக்
காணீர்

- திருவாய் 7.3:1

என்றும் தம் பாசுரங்களில் குறிப்பிடுவர். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல்,

கல்லும் கனைகடலும் வைகுங்த வான்நாடும்
புல்லென்று ஒழிந்தனகொல் ஏபாவம் - வெவல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்து அகம்.

- பெரி.திருவந். 68