பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈசுவரனின் இயல்பு

35


களையும் திருந்தச் செய்து, தனது திருவுள்ளத்தே வைத்து, ஒருநோவும் வாராதபடி காத்து நோக்குகின்ற இயல்பினையுடையவர் யாவர்? ஒருவரும் இலர். (8)

எல்லா உயிர்களையும் பாதுகாத்தலையே தனக்கு இயல்பாக உடையவன்; கண்ணபிரானாகிய எம் இறைவன்; அவன், அழிக்கும் காலம் வந்தவாறே, எல்லா உயிர்களையும் தன திருமேனியில் சேரச் செய்து, பின்னர், தனது திருநாபிக் கமலத்திலே, எல்லாக் குணங்களும் பொருந்திய நான்முகனையும், இந்திரனையும், தேவர்களையும், தேவர்களுக்குரிய உலகங்களையும் உண்டாக்கினான். (9)

வெண்மை நிறம் பொருந்திய இடபத்தை வாகனமாகவுடைய சிவனும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும், கள்வனே! எங்களையும் மற்றை உலகங்களையும் நின்னிடத்தில் நின்றும், தோன்றச் செய்த இறைவனே! என்று, கருட வாகனத்தையுடைய இறைவனுடைய திருவடிகளை வணங்கித்துதிப்பார்கள். (10)

பலச்சுருதிப் பாசுரத்திலும் "ஏழுலகங்களிலும் உள்ளவர்கள் எல்லாரும் ஏத்த, எல்லா உலகங்களையும் தன் திருவடியில் அளந்துகொண்ட அழகு பொருந்திய கூத்தன்' என்று குறிப்பிடுகின்றார்.

(3) எம்பெருமான் மோட்சம் அளிக்கும் தன்மை. இஃது ‘அணைவது'(2.8) என்ற திருவாய்மொழியில் விளக்கப் பெறுகின்றது.

திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே சேர்வது; தாமரைப் பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியின் திருமேனியைக் கலப்பது; பிரசித்தராக விளங்குகின்ற அந்தப் பிரமன் சிவன் இருவர்கட்கும் தானே காரணமுமாவான்; எல்லாப் பொருள்கட்கும் ஒத்த பிறவியை