பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அர்த்த பஞ்சகம்



நிற்கின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற பிரானேயாவன்; ஆதலால் நான் கூறுகின்றவை சிறிதும் பொய்யில்லை; அவனையே துதி செய்யுங்கள். (5)

வேறு ஒரு தெய்வத்தைத் துதித்து ஆதரிக்கும்படியாகத் தனக்குப் புறம்பாக்கி உங்களை இவ்வகையாகத் தெளியும் படியாகச் செய்து வைத்தது; எல்லோரும் வீடு பேற்றை அடைந்தால் சாத்திர மரியாதை கெட்டுவிடும் என்றேயாம்; திருக்குருகூரில் எழுந்தருளியிருக்கின்ற மிக்க ஆற்றலோடு கூடிய எம்பெருமானது மாயமாகும் இது; அதனை அறிந்து அறிந்து தப்பிப் பிழைப்பதற்குப் பாருங்கள். (6)

வேறு ஒர் தெய்வத்தைப் பாடியும் ஆடியும் வணங்கி யும் பலபல வகைகளாலே சாத்திரங்கள் கூறிய வழிகளிலே சென்று திரிந்து பல பிறப்புப் பிறந்து அதன் பலன்களையும் கண்டீர்கள்; அதனால் திருக்குருகூரில் நின்ற திருக் கோலமாய் எழுந்தருளியிரும் பொலிந்துநிற்கும் பிரானுக்கு அடிமை புகுவீர். (7)

அடிமையாசப் புகுத்து சிவபிரானாகிய தன்னைக் கண்ட மார்க்கண்டேயனைச் சிவபிரானும் ஆபத்துக் காலத்தில் காப்பாற்றியது நாராயணனது திருவருளாலே யாகும்; திருக்குருகூரில் ஆதிப்பிரான் நின்ற திருக்கோலமா யிருக்க, அவரைவிட்டு வேறு தெய்வங்களைப்பற்றிப் பேசுகின்றீர்களே, உங்கள் அறிவின்மை இருந்தவாறு என்னே! (8)

சொல்லாப்படுகின்ற ஆறு புறச்சமயங்களும் மற்று முள்ள குத்ருஷ்டிகளும் கூட்டமாகத் திரண்டு வந்தாலும் தன் விஷயத்தில் அளவிட்டுக் காண்பதற்கு அரியனாய் இருக்கின்ற ஆதிப்பிரான் எழுந்தருதியிருக்கின்ற திருக்குருகூர் என்ற திவ்வியதேசத்தை மனத்தில் இருத்துங்கள். (9)