பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அர்த்த பஞ்சகம் "நேர்ந்தேன் அடிமை (இரண். திருவந் 80) என்பர். அவற்கு அடிமைப்பட்டேன் (மூன். திருவந் 37) என்று கூறுவர் பேயாழ்வார். திருமதி சையாழ்வாரோ, என்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை (நான். திருவந் 95) என்று இக்கருத்தில் ஊற்றம் காட்டுவர். ஆன்மா தனக்குத்தானே தோற்றுவது என்று மேலே கூறப்பெற்றது. எந்தப் பொருளும் காணப் பெறுவதற்கு விளக்கின் ஒளி வேண்டும் என்பதை நாம் அறிவோம். ஆனால், விளக்கு மற்றொரு விளக்கு வேண்டாமலேயே தனக்குத்தானே நன்கு விளங்கச் செய்வது போலவே, ஆன்மாவும் ஞானத்தை எதிர்பாராமலேயே தனக்குத் தானே விளங்கும். விளக்கும் அதன் ஒளியும் ஒளியுள் ளவைகளாக இருப்பினும், ஒளிக்கு விளக்கு இருப்பிடமாக இருப்பது போலவே, ஆன்மாவும் தான் ஞான மயமாக இருப்பினும், தனக்குத் தர்மமான ஞானத்திற்கும் தான் இருப்பிடமின்றி ஞான மாத்திரமானால் நான் அறிவு' என்று ஞான மாத்திரமாகச் சொல்ல வேண்டும். நான் இதனை அறியா நின்றேன்' என்று தன்னை ஞாதாவாக (அறிபவனாகச்) சொல்லக் கூடாது. என்னுடைய' என்ற சொல்லானது நான் என்ற சொல்லின் ஆறாம் வேற்றுமை. நான் என்பதற்கு எது பொருளோ அதுவே தேகம், இந்திரியம்... என்பவற்றுக்கும் பொருளாக இருக்க முடியாது. ஆன்மாவானது 'நான் என்ற சொல் லுக்குப் பொருளாய்த் தோன்றுவதனால் உடல் முதலிய வற்றைக் காட்டிலும் அது (ஆன்மா) வேறுபட்டது என்பது பெறப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/75&oldid=739083" இலிருந்து மீள்விக்கப்பட்டது