பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மாவின் இயல்பு 47 ஆன்மாவிற்கு இன்ப துன்பங்கள் உடம்பின் தொடர் பால் ஏற்படுகின்றன. இத்தொடர்பு தொடக்கம் என்று என்றிராத வினைத்திறள்களினால் (கர்மத்தினால்) ஏற்படு கின்றது. ஆன்மா எக்காலத்திலும் உளதாயின் பிறப்பு இறப்பு என்பவை ஏன் என்ற வினா எழுகின்றது. பிறப்பு என்பது,உடல் தொடர்பு, அஃதாவது ஆன்மா ஒர் உடலை விட்டுப் பிறிதோர் உடலை அடைவதாகும்; இறப்பு என்பது, ஆன்மா உடலைத் துறப்பதாகும். அங்ங்ணமே ஆன்மா அணுவளவாக இதயத்தில் மாத்திரம் இருக்கு மாகில், அஃது உடலினுழ் எல்லாப் பகுதிகளில் உண்டாகும் இன்ப துன்பங்களை அறிவதெங்ங்ணம்? என்ற மற்றொரு வினாவும் எழுகின்றது. இரத்தினங்கள், கதிரவன், வினக்கு ஆகிய ஒளியுள்ள பொருள்கள் ஒர் இடத்தில் இருப்பினும் அவற்றின் ஒளி எங்கும் ஒக்கப்பரவுவது போல, ஆன்மா வும் இதயத்தில் மாத்திரம் இருப்பினும் அதனுடைய 'தர்மபூத ஞானம்' உடல் முழுவதும் பரவுவதனால் உடலின் எப்பகுதியில் உண்டாகும் இன்ப துன்பங்களை யும் அஃது அநுபவிக்கத் தடை இல்லை என்பது அறியப் படும். மேலும், எல்லாச் செயல்களும் உடலை யுடைய வனுடைய (சரீரியினுடைய) நினைவு அடியாக உண்டா வன போலவே ஈசுவரனுக்குச் சரீர பூதமான இவ்வான்மா வினுடைய எல்லாச் செயல்களும் சரீரியான பரமான்மா வினுடைய நினைவு அடியாகவே உண்டாகும். அவனன்றி ஒர் அணுவும் அசையாதல்லவா? வீடு, நிலம் பிள்ளை, மனைவி, தனம், தானியம், தோட்டம் முதலியவை உடையவனுடைய (ஆண்டானுடைய) செயல்கட்காகவே நிலைபெற்றிருக்கும். ஆனால், அவை அவனையொழியவும் தனித்து வேறாக நிலைபெற்றிருக்கும். ஆயினும், ஈசுவர னுக்கு அடிமையாகவுள்ள (சேஷமாகவுள்ள) ஆன்மா ஆன்மாவை விட்டுப் பிரித்திராத உடலைப் போல் (சேஷியான ஆண்டான்) ஈசுவரனையொழியவும் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/76&oldid=739084" இலிருந்து மீள்விக்கப்பட்டது