பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மாவின் இயல்பு 53. செறிந்துள்ள பேரொளிமான சரீரத்தை உடைய வனும், தாமரை போன்ற திருச்கண்களையுடையவனும் பயில்வதற்கு இனிய பாற்கடலிலே அறிதுயில் செய்கின்ற நம் பரமனுமான எம்பெரும்ான் சேர்கின்ற பெரிய செல்வத்தையுடையவர்கள் எப்பிறவிகளை உடையவர் களாகிலும் அவர்களேதாம், உண்டாகின்ற பிறவிகள் தோறும் எம்மை அடிமை கொள்ளத்தக்க சுவாமிகள். (1) ஆளுகின்ற மேலானவனை. கண்ணபிரானை திருவாழியைத் தரித்த உபகார ந் ைத உடையவனை, ஒப்பற்ற நான்கு தோள்களையுடைய பரிசுத்தமான நீல மணி போன்ற் நிறத்தையுடையவனான எம் பெருமானைத் தாளும் தடக்கையும் கூப்பி வணங்குகின்ற அவர்கள்தாம் பிறப்புக்ள்தோறும் எப்பொழுதும் எம்மை அடிமையாக வுடைய தலைவர் ஆவர். (2) தலைவனை, பூமியில் தெய்வ உலகமும் ஏத்துகின்ற வாசனை பொருந்திய திருத்துழாய் மாலையைத் தரித்தவனை. அழகிய நீண்ட சக்கரத்தையுடைய எந்தையை எல்லோர்க்கும் உபகாரனாக இருப்பவனின் பாதங்களை வணங்குகின்ற அடியார்களை, வணங்குகின்ற அடியார்கள் தாம் சொல்லப்படுகின்ற பிறப்புகளிலெல்லாம் எம்மை அடிமை கொண்டவர்களாவார்கள். (3) உடுத்திருக்கின்ற பொருந்திய பொன்னாடையையுடை யவன், கழுத்தணியையுடையவன், தரித்த அரைஞானினை யுடையவன், ஒரு பக்கமாகப் பொருந்தியிருக்கின்ற பொன் னாலான பூணுரலையுடையவன், பொன்னாலான திரு முடியையுடையவன், மற்றும் இயற்கையிலே பொருத்திய பல ஆபரணங்களை யுடையவனான திருநாரணனுடைய அடியார்கள் கண்டீர் இடம் பொருந்திய பிறவிகள் தோறும் எமக்கு எம்முடைய பெருமக்கள் ஆவர். (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/82&oldid=739091" இலிருந்து மீள்விக்கப்பட்டது