பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

的锡 அர்த்த பஞ்சகம் பெருமக்களாகவுள்ளவர் தங்கட்குப் பெருமானும் தேவர்களுக்கு வருத்தமில்லாதபடி அக்காலத்தில் அரிய அமுதத்தை உண்பித்த தலைவனுமான எம்பெருமா லுடைய பெருமையை புகழ்ந்து பேசுகின்ற அடியவர்கள் தாம் இனி வருகின்ற பிறவிகளிலும் இப்பிறவியிலும் நம்மைப் பாதுகாக்கும் சுவாமிகள் ஆவார்கள். (5) காப்பாற்றுகின்ற மேலானவனை, கண்ணபிரானை, சக்கரத்தையுடைய உபகாரகனை, தேன் துளிக்கின்ற வாசனையையுடைய திருத்துழாய் மாலையைத் தரித்த ப்ரிசுத்தமான நீலமணி போன்ற நிறத்தையுடையவனை, எம்மானை, ஒளி பொருந்திய சோதி சொரூபத்தை யுடையவனைத் தம் மனத்தின்கண் வைத்துத் தியானிப் பவர்கள்தாம், சலனமில்லாத எம்மை அடிமை கொண்டு இப்பிறவியோடு மற்றைப் பிறவிகளோடு வேற்றுமை யின்றிக் காப்பவராவர். . . " . (6) தொடர்ந்து வருகின்ற பிறவிகளில் புகாதபடி காத்து அடியார்களை ஒரு தேச விசேஷத்திலே கொண்டு சென்று தனது சொரூபத்தைக் கொடுத்துத் தன் திருவடிகளின் கீழே அடிமை கொண்டருளும் எந்தையினுடைய இயற்கை யான உபகாரத்தை அடைவு கெடக் கூறும் அடியார் களுடைய புகழை அடைவுகெடக் கூறுகின்றவர்கள்தாம் நன்மையைப் பெறும்படி செய்து எம்மை எப்பொழுதும் உய்யும்படி கொள்ளுகின்ற நம்பர் ஆவர். (7) நம்பத் தகுந்தவனும், உலகத்தையெல்லாம் படைத்த வனும், திருமகளை மார்பிலே தரித்திருப்பவனும், மேலு லகங்களிலுள்ள எத்தகையோர்க்கும் அறிதற்கு அரியவனு மான எம்பெருமானுடைய திருநாமத்தை, கும்பிபோக நரகத்திலே கிடப்பவர்களாகி அங்கிருந்து ஏத்துவார் களேயாகில் அவர்களே தாம் எம்முடைய பலவகைப்பட்ட பிறவிகள்தோறும் எமக்குத் தெய்வங்கள் ஆவர். (8;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/83&oldid=739092" இலிருந்து மீள்விக்கப்பட்டது