பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அறநிலையங்கள்

கட்சியென்பதும் ஒரு லேபில்தான். ஆகவே, லேபிலைப் பார்த்து, யாரும் ஏமார்ந்துவிடக்கூடாது. சிசர்ஸ் சிகரெட் பாக்கெட்டுகளில் அக்பர்ஷா சிகரெட்டுகளும், அக்பர்ஷா சிகரெட் பாக்கெட்டுகளில் சிசர்ஸ் சிகரெட்டுகளும் இருக்கும். அதலால் லேபிலைப் பார்த்துவிட்டுச் சரக்கை வாங்கிவிடக்கூடாது. உள்ளே இருக்கும் பொருளைப் பார்த்துத்தான் வாங்கவேண்டும்.

அழகப்பாக்கள், டால்மியாக்கள், டாட்டாக்கள் ஆகிய பெரும் பணக்காரர்கள் எல்லாம் எப்பொழுதும் ஒரு கட்சியிலேயே இருப்பார்கள் என்றா எண்ணுகிறீர்கள்? முதலாளிகளுக்கு நாளை காங்கிரஸ் பிடிக்காமல் போகலாம். வியாபாரிகளுக்கு வரிப் பளு அதிகமாக அதிகமாக, அவர்கள் காங்கிரசை வெறுத்து, வேறு கட்சியிலே சேரக்கூடும். தொழிலாளர்கள் பலருக்கு மனம் நோகலாம்- இதன் காரணமாகத் தொழிலாளர்களும் வேறு கட்சியில் சேரலாம். ஆகவே, யாரும் ஒரே கட்சியிலேயே என்றைக்கும் இருந்துவிடுவார்கள் என்று சொல்லிவிடமுடியாது.

மந்திரிசபை இந்த மசோதாவை நல்ல நோக்கத்துடன் தான் கொண்டு வந்திருக்கிறது. தமிழ் நாட்டிலே எல்லா அலங்களிலும் சீர்திருத்தம் தேவை. ஆனால், நாம் எணணும் சீர்திருத்தமெல்லாம், இம்மசோதாவில் நிறைவேறி விடும் என்று நாம் எண்ணிவிட முடியாது.

இம்மசோதா ஒரு முதற்படி. சீர்திருத்தத்துக்கு அறிகுறி, அத்தாட்சி நாளாக, நாளாக, நாம் சொல்லும் நல்லதொரு சீர்திருத்தத்துக்கு வந்துதானே ஆக வேண்டும்? ஒரு கோயிலிலே! 27 தீவட்டிகள் எரியவைக்கப் படுகின்றன. அந்த 27 தீவட்டிகளும் சரியாக எரிகின்றனவா? அதில் ஊற்றிவிட்ட எண்ணெய் போக மிகுதி