பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

11

யிருக்கும் 2 வீசை எண்ணெய் அர்ச்சகர் வீட்டுக்குச் செல்லுகிறதா? 10 படி வெண்பொங்கலில் 2 படி வெண்பொங்கல் தெரியாமல் அர்ச்சகர் வீட்டுக்குச் செல்லுகிறதா என்பதையெல்லாம் பார்ப்பதற்குத் தான் இந்த மசோதா. பொதுவாகச் சொன்னால், கோயில்களிலே திருட்டு எந்தவிதத்திலும், எந்த ரூபத்திலும் நடைபெறக் கூடாது. அதைத் தடுப்பதற்குத்தான் இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. கோயில்களில் எத்தனை பரமாத்மாக்கள், எத்தனை புண்ணியாத்மாக்கள் இருக்கின்றனர். என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் இம்மசோதா பயன்படும்.

கோயில் திருட்டுக்கள் இன்று நேற்றல்ல, நம் முப்பாட்டனார் நாட்களிலிருந்தே நடந்துவருகின்றன. விஜய நகர அரசர் கிருஷ்ணதேவராயர் ஆண்ட காலத்தில், அவர் ஆட்சி தெற்கே திருவாரூர் வரையில் பரவியிருந்தது. அப்பொழுது திருவாரூரில் உள்ள சிவாலயத்தின் அர்ச்சகன் நாகராஜ நம்பி என்பவன் 63 யன்மார் விக்கிரகங்களில் 2 விக்கிரகங்களைத் திருடி, பஞ்ச லோகத்தாலான அவைகளை உருக்கி விற்றுவிட்டான். இதைத் திருவாரூரில் உள்ள ஒரு சிவபக்தர் அறிந்தார். இவ்விஷயத்தை எப்படியேனும் அரசருக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்று எண்ணினார். அரசனிடத்தில் பக்தர் நேரில் சென்று கூற அச்சப்பட்டார். அவர் ஒரு கிளியை வளர்த்துவந்தார். அந்தக் கிளியை

”கிருஷ்ணதேவராயா! கிருஷ்ணதேவராயா!
முன்னாள் அறுபத்து மூவர் இருந்தார்:
இந்நாள் இரண்டுபேர் ஏகினார் - கன்னான்
நறுக்குகின்றான்; விற்றுவிட்ட

நாகராச நம்பி இருக்கின்றான், கிருஷ்ணதேவராயா!”