பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

25

தைக் கொடுத்தால், நமக்கு நல்ல கமிஷன் கிடைக்குமே! என்று எண்ணுகிறான்.

ஒரு டைரி வைத்துக்கொண்டு, யார் புண்ணியவான்? யார் பாபி? என்று கண்டுபிடிப்பதற்காகக் குறிப்பு எழுதி வந்தால், நீங்கள், 6-ந் தேதி புண்ணியவான் என்று யாரை எழுகினீர்களோ அவரைப்பற்றி, 7-ம் தேதி பாபி என்று எழுதுவீர்கள். 7-ந் தேதியன்று, பாபி என்று எழுதியவரை 8-ந் தேதியன்று, புண்ணியவான் என்று எழுதுவீர்கள்.

3ம் 3ம் = 6, 4ம் 4ம் = 8, இரண்டும் இரண்டும் பெருக்கினால் நான்கு என்று நிர்ணயிக்கப்பட்ட முடிவைப் போல், பாவ புண்ணியங்கள் நிர்ணயித்தப்படாதவை.

ஒருகாலத்திலே பசு ஆராய்ச்சி மணியை அடித்து தாம். அரசன் சென்று பார்த்தானாம்; பசு, கண்ணீர் விட்டு நின்றதாம். அதன் கன்று, இளவரசனான் வீதி விடங்கன் நடத்திய தேர்க்காலில் அகப்பட்டிறந்தது என்று கேள்வியுற்றனும். 'இப்பசு, தனது கன்றையிழந்து வருந்துவது போல, எனது ஒரே புதல்வனையிழந்து, நான் வருந்துவேன்! அதுவே நீதி!' என்று தன் குமரனைத் தேர்க்காலில் இட்டுப் பசுவுக்கு நீதி செய்தானாம், மனுநீதிகண்ட சோழன்.

இப்படி, இந்தக்காலத்திலே யாராகிலும் செய்ய முடியுமா? செய்ய முயன்றாலும், சட்டம் இடந்தருமா? சர்க்காருடைய 302-வது சட்டம் சும்மாயிருக்குமா?

வல்லூறுக்குப் பயந்து வந்த ஒரு புறாவின் உயிரைக் காப்பதற்காகத் தனது சதையை அறுத்துக் கொடுத்தானாம், சிபிச்சக்கரவர்த்தி. இது அந்தக்காலத்தில். இப்படி யாராகிலும் இந்தக்காலத்தில் செய்வார்களா? புறா