பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

27

சிவனாரைக் கல்லால் அர்ச்சித்து முக்தி பெற்றதாகக் கூறப்படுகிறது. காரைக்காலம்மையார், உடல் தேய உள்ளம் நெகிழ, பேயுருக்கொண்டு, எலும்பெலாம் தேய கைலயங்கிரியை நோக்கிச் சென்றார். ஆனால், சிவபெருமான், காரைக்காலம்மையாரை நோக்கி, "அம்மையே, திருவாலங்காட்டிற்கு வா” என்று அழைத்தார். இவைகளால் ஆண்டவனை அடைய, எந்த வழியைப் பின்பற்றுவது? என்று திட்டமாகப் புராணங்கள் கூறவில்லை.

ஐந்து அல்லது ஆறு ரூபாய் சம்பளம் கட்டுவதற்காக, ஏழைப் பையன் ஒருவன் வந்து காசு கேட்டால், என்ன சொல்கிறோம்? ஏண்டா, இப்படிப் பிச்சை எடுத்து அலைகிறாய்? படிச்சவனெல்லாம் என்னத்தைச் செய்கிறார்கள்? எங்கேயாவது கடையிலே போய் வேலை பார்" என்று தானே சொல்லுகிறோம்?

கிருத்திகை அபிஷேகத்திற்காக ஓடிவரும் அர்ச்சகரிடம், ’அடிக்கடிதான் அபிஷேகம் செய்கிறேனே, ஒரு கார்த்திகைக்கு நம்மை விட்டுவிடுங்கள்’ என்று சொன்னால் கேட்கமாட்டாரா? அதைமட்டும் தவறாமல் செய்துவிடுவார்கள். ஏழைப் பையனின் படிப்புக்கு எந்தவித வசதியையும் செய்யமாட்டார்கள்.

மக்களைக் கெடுப்பது எவையோ, அவையெல்லாம் பாபம். மக்களை வாழவைப்பது எவையோ, அவையெல்லாம் புண்ணியம் என்று நாம் கொள்வோமானால் அது மிகப் பொருத்தமாக இருக்கும். துறவிகளுக்கும், ஜீயர்களுக்கும் அதிகமான பொருள் என்? துறவறத்தை மேவுகின்ற துறவுகளுக்கு, ஏராளமான பொருள்கள் ஏன்?

பட்டினத்தடிகள், "இருக்கும் இடந்தேடி உணவு வராவிடில், உணவு இருக்கும் இடந்தேடி ஏகேன்"