பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறம் உரைத்த அன்னையார்

43



மெய்யும் ஆகிய முதல் எழுத்துக்கள் முப்பது அன்றோ ! அவை போன்று, இந்நூல் முப்பது இனிய வெண்பாக்களைக் கொண்டு விளங்குகின்றது.

நீரளவே யாகும் நீராம்பல்

‘வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்(து) அனைய(து) உயர்வு’

என்பது வள்ளுவர் வாக்கு. நீரில் பூக்கும் பூக்களின் தண்டுகள், அந்நீரின் ஆழத்திற்கு ஏற்ற நீளம் உடையனவாக இருக்கும். அதைப் போன்றே மக்களுக்கு உயர்வெல்லாம், அவர்கள் மனத்தில் எழும் ஊக்கத்திற்கு ஏற்ப அமையும் என்பது அப்புலவர் கருத்து. இக்குறளில் வரும் உவமையை மட்டும் ஔவையார் எடுத்துக் கொண்டார். ‘வெள்ளத் தனைய மலர்நீட்டம்’ என்பதை, ‘நீரளவே யாகுமாம் நீராம்பல்’ என்று கூறினார். இந்த ஓர் உவமையை வைத்துக் கொண்டு மூன்று உண்மைகளை விளக்கினார் ஔவையார். ‘ஒருவன் கற்ற நூலின் அளவோட துண்ணறிவு அமையும்; முன்பு செய்த தவத்தின் அளவே செல்வம் அமையும்’. பிறந்த குலத்தின் அளவே குணம் அமையும்.' இவற்றை ஒரு பாட்டில் காட்டும் அவர் திறத்தை என்னென்று போற்றுவது!