பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அறநூல் தந்த அறிவாளர்


நீரளவே யாகுமாம் நீராம்பல்; தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு :-மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்:
குலத்தளவே ஆகும் குணம்’

இவ்வாறு உவமைகளைக் கொண்டு பல உண்மைகளைச் சிறுவர்க்கு எளிதாக விளக்கும் திறத்தை மூதுரையில் கண்டு மகிழலாம்.

முத்தமிழ் வேண்டும் மூதாட்டியார்

ஒளவையார் பாடிய மற்றோர் அறநூல் ‘நல்வழி’யாகும். இந்நூல் வயதால் முதிர்ந்தவர்க்கு அறநெறி காட்டும் திறம் உடையதாகும். இந்நூலின் முதற் பாடலில் ஒளவையார் விநாயகப் பெருமானிடம் ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று வேண்டுகிறார். முச்சங்கத்தார் போற்றி வளர்த்த முத்தமிழ் நூலறிவை வேண்டும் அவர், அவற்றிற்கு ஈடாகத் தாம் நான்கைத் தருவதாகவும் கூறுகிறார் பால், தேன், பாகு, பருப்பு என்னும் நான்கையும் கலந்து உண்ணுவதற்கு நான் தருவேன். நீயோ எனக்கு முத்தமிழைத் தந்தால் போதும் என்று வித்தகமாக அப்புலவர் கேட்பது வியப்பைத் தருவதாகும்.

பெரியோரும் சிறியோரும்

இவ்வாறு விநாயகப் பெருமானிடம் வேண்டிய ஒளவையார் சங்கத் தமிழ் நூல்-