பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறம் உரைத்த அன்னையார்

45

 களின் அரிய கருத்துக்களையே நல்வழியாகத் திரட்டிக் கொடுத்துள்ளார். “சாதி இரண்டேயன்றி வேறில்லை; அவை பெரியோர், சிறியோர் என்ற சாதிகளே; இல்லாத ஏழை மக்களுக்கு இட்டார். எல்லாரும் பெரியோர் ஆவர்; இடாதார் எல்லாரும் சிறியோர் ஆவர்; இவ்வாறு சாதியைப் பற்றி வேதமே விளக்குகின்றது” என்று உயர்ந்த உண்மையை மிகவும் எளிதாகவும் உறுதியாகவும் ஔவையார் நல்வழியில் விளக்குகின்றார்.

தமிழர் கற்கத் தக்கன

தமிழர் கற்கத் தக்க நூல்கள் எவை என்பதை ஒளவையார் ஒரு பாட்டில் காட்டினார். ‘திருக்குறள், வேதத்தெளிவாய்விளங்கும். சிவஞானபோதம், மூவர் தமிழாகிய தேவாரம், சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம், மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார், திருவாசகம், திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகிய ஏழு நூல்களையும் தமிழர் கட்டாயம் கற்றல் வேண்டும். அவை ஏழும் ஒப்பற்ற நூல்கள்’ என்று நல்வழியில் வற்புறுத்தியுள்ளார்.

‘தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனி மொழியும்-கோவை