பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அறநூல் தந்த அறிவாளர்


கிறித்துவ சமயம் பரவுவதைத் தெரிந்தார். இத்தாலிய நாட்டிலிருந்து கிறித்துவப்பாதிரியார் ஒருவர் அப்பகுதியில் வந்து தங்கி இருப்பதை அறிந்தார். அவர் வீரமாமுனிவர் என்ற பெயருடன் கிறித்துவ சமயப்பணி செய்து வந்தார். அவர் தமிழ் காட்டு முனிவர்களைப் போல் கோலம் பூண்டு, தமிழர் உள்ளங்களைக் கவர்ந்து வந்தார். அவர் தமிழைப் பயின்று வீரத்துடன் சொற்பொழிவு ஆற்றினர். அதனால் மக்களைத் தம் சமயத்திற்கு இழுத்தார். அவரைச் சந்தித்துக் குமரகுருபரர் சமயவாதம் புரிந்தார்.

சைவம் காத்த தெய்வக்கவிஞர்

குமரகுருபரரது அறிவையும் ஆற்றலேயும் கண்டு வீரமாமுனிவர் அஞ்சினர். அவர் நெல்லை நகரைவிட்டு நீங்கினர். உடனே குமரகுருபரர் நெல்லேயில் இரு சைவ மடங்களே நிறுவினார். ஊரின் தென்பால் மெய்கண்டார் மடத்தை உண்டுபண்ணினார். வடபால் சேக்கிழார் மடத்தை அமைத்தார். இரண்டு மடங்களிலும் சைவ சமயச் சொற்பொழிவுகள் நடைபெறுமாறு செய்தார். மக்களுக்குச் சைவத்தின் பெருமை தெரியுமாறு அறிவுறுத்தினர். இச்செயலால் குமரகுருபரர் சைவம் காத்த தெய்வக் கவிஞர் ஆனார்.