பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்னெறி காட்டிய நற்றவர்

83


உப்பு விற்கும் பெண்ணின் உயர்வு

சிவப்பிரகாசர் தமது ஊராகிய காஞ்சியை நோக்கிச் செல்லும் வழியில் திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊரை அடைந்தார். அங்கு அவர் தங்கியிருக்கும் நாளில் அறிவில் சிறந்த பெண்ணொருத்தி தெருவில் உப்பு விற்றலைக்கண்டார். அவளுடைய புலமையைப் பிறர்க்குப் புலப்படுத்த எண்ணினார். அவளை அருகில் அழைத்துப் பாடல் ஒன்றைப் பாடினார். அதைக் கேட்ட அப்பெண்ணும் சிவப்பிரகாசரை வணங்கிப் பாடல் ஒன்றைப் பாடினாள்.

‘தென்னோங்கு தில்லைச்
சிவப்பிரகா சப்பெருமான்
பொன்னோங்கு சேவடியைப்
போற்றினோம்-அன்னோன்
திருக்கூட்டம் அத்தனைக்கும்
தெண்டனிட்டோம் தீராக்
கருக்கூட்டம் போக்கினோம்
காண்’

இப்பாடலைப்பாடி, அனலிடைப்பட்ட மெழுகு போல் மனம் உருகி நின்றாள்.

சிவப்பிரகாசர் தவ வாழ்க்கை

பின்னர், சிவப்பிரகாசர் தாம் வாழ்ந்த துறைமங்கலத்தை அடைந்தார். அங்கு