பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அறநூல் தந்த அறிவாளர்


நன்னெறி வெண்பா நாற்பது

அவ்வாறு எழுதி வந்த நாற்பது வெண்பாக்களும் நன்னெறி காட்டும் பொன்னான பாக்களாக விளங்கின. ஆதலின் அவற்றைத் தொகுத்து ‘நன்னெறி’ என்றே பெயர் சூட்டினார். இந்நூலில் உள்ள பல பாடல்கள், கடலையும் கடல் நிகழ்ச்சிகளையும் உவமைகளாகக் கொண்டு ஒளிர்வன ஆகும்.

கடல்நீரும் கயவர் செல்வமும்

கருங்கடலின் உப்புநீர் மக்கட்குப் பயன்படுவது இல்லை. ஆனால், அந்நீரை மேகம் முகந்து வந்து மழையாகப் பெய்து மக்கட்குப் பயன்படுத்துகிறது. இச்செய்தியை உவமையாகக் கொண்டு, சிவப்பிரகாசர் உலகிற்கு ஒரு கருத்தை விளக்கினார். சிலர், தம் பெருஞ்செல்வத்தைப் பிறர்க்குச் சிறிதும் உதவமாட்டார். அத்தகையோருடைய செல்வம் சில காலத்தில் பிறர்க்கு உதவும் தன்மையுடையோரைச் சென்று சேரும் என்று கூறினார்.

கடலும் கல்விச் செருக்கும்

கடல் அளவினால் பெரியது. அதன்கண் உள்ள நீரோ அளவு கடந்தது. அத்தகைய கடல் நீரும் அகத்திய முனிவன் கையால் ஒரு