பக்கம்:அறநெறி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£2,577. 10Ꮬ

ΙΙ

சுவாமி விவேகானந்தர் சென்னை மாநகரில் ஒரு முறை நிகழ்த்திய சொற்பொழிவு உளங்கொளத் தக்கது. நாட்டுப்பற்றினையும், ஏழ்மை நிலையைப் போக்கும் திருப்பணியின் இன்றியமையாமையினையும் அஃது ஒருங்கே உணர்த்தி நிற்கிறது அவர் கூறுகிறார் :

“நாட்டுப் பற்றைப் பலர் பேசுகிறார்கள். எனக்கும் அதில் பற்று இருப்பதோடு அதைப்பற்றிய எனது தனி கொள்கையும் ஒன்று உண்டு. முதலாவதாக உள்ளம் கசிந்துருகி உணரவேண்டும். உள்ளக் கசிவினின்றும் அருள் சுரக்கிறது. முடியவே முடியாத-அறவே ஆக்க முடியாத செயல்களையும் செய்து முடிப்பது அன்பு ஒன்றே. உலகத் துள்ளே அறிதற்கு அரிதாய் இருப்பவைகளை அறிவிப்பது அன்பே ஆகும். ஆதலால் நாட்டின் சீர்கேட்டைச் செப்பனிட விரும்புகிறவர்களே! நாட்டின் மீது நல்லன்பு பொழிபவர்களே! நைந்து உருகுங்கள்! காதலாகிக் கசிந்து உருகுங்கள்! உள்ளுணர்வு என்பது உங்கள் மாட்டு உளதா! தேவர்கள்! முனிவர்களின் சந்ததிகளான கோடானு கோடி மக்கள் விலங்குகளோடு ஒப்பிடுவதற்கான இழி நிலையிலே நின்று வீழ்ந்து கிடப்பது பற்றி உங்களது உள்ளம் பதை பதைக்கின்றதா? நெக்கு நெக்கு உருகுகின்றதா? கனியும் கிழங்கும் மானியங்களும் கணக்கின்றிக் கிடக்கும் பெருவளம் மிக்க நாட்டிலே பாமரர்கள் பஞ்சையர்களாய், பராரிகளாய்ப் பல்லாண்டு களாகப் பசிப்பிணியால் வாடிக் கிடப்பதைக் கண்டு, உணர்ந்து உங்களது உள்ளம் 22-60Lகின்றதா? கல்லாமை என்னும் கார்மேகம் மாந்தனது மனத்தைக் கவர்ந்திருப்பது கண்டு நீங்கள் கவலையுறு கின்றீர்களா? இந்த நாட்டின் நிலைகுலைவு உங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/105&oldid=586842" இலிருந்து மீள்விக்கப்பட்டது