பக்கம்:அறநெறி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அறநெறி

வருத்துகின்றதா? உறக்கமறச் செய்கின்றதா? இந்த எண்ணம் உங்கள் இரத்தத்திலே ஊறி, இதயத்திலே ஊடுருவிப் பாய்ந்து உங்களது தன்மையை அறவே மாற்றிவிட்டதா? இதை நினைந்து நினைந்து நீங்கள் பித்தர்கள் போல, பேயர்கள்போல ஆகிவிட்டீர்களா? நாட்டின் துக்க நிலையைப் பற்றிய கவலையாலே பீடிக்கப்பட்டமையால் நீங்கள் பேரையும் புகழையும், உற்றார் உறவினரையும், உடலையும் பொருளையும் ஆவியையும் அறவே மறந்து விட்டீர்களா? இந்த நிலை உங்களுக்கு வந்துவிட்டதா? அப்படியானால் இதுவே இந்நாட்டுப் பற்றினைப் பெறுவதற்குரிய முதற்படி யாகும்.”

இவ்வாறு பிறந்த தாய்நாட்டுப் பற்று வளர்வதற் குரிய வழிகளை விவேகானந்தர் விளக்கமாக எடுத்துரைத் தார்.

அவர் மணிமொழியினை நோக்குவோம். இந்தத் திருநாட்டில் இல்லை என்ற குறைக்கே இடமில்லாமல் இயற்கை அன்னை வற்றாத வளங்களை வாரி வழங்கியிருக் கின்றாள். ஆனால் அந்த வளங்களை எல்லாம் உடல் பலம் படைத்தவன், அறிவு பலம் படைத்தவன் சாதி பலம் படைத்தவன் எனப் பலரும் பங்கு போட்டுக் கொண்டு விட்டனர். எனவே சமுதாயத்தின் கணிசமான பெரும் பகுதியினர் பசி பட்டினி என்று அல்லற்பட்டு ஆற்றாது வாழ்வதும், அதே சமயத்தில் சமுதாயத்தில் உண்டு கொழுத்து வாழ்வதுமான ஒரு பகுதி செல்வாக்கோடு இருப்பதும் இயற்கையாயிற்று. இந்த நாடு ஒற்றுமை குலைந்து சீர்கேடு ஏற்பட்டு சின்னmபின்னமாவதற்கு இ ந் நி ைல வழிவகுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/106&oldid=586843" இலிருந்து மீள்விக்கப்பட்டது