பக்கம்:அறநெறி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o{5}.twrf- 107

பானாலும், அவர் நலிந்த சமுதாயத்து மக்கள்மீது கொண்ட பற்றைத் துறக்காமல் வாழ்ந்தார். கடவுள் தொண்டு, நாட்டுத் தொண்டு, மக்கள் தொண்டு எனத் தொண்டே வாழ்க்கை என வாழ்ந்தவர் விவேகானந்தர். மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு’ என்பதும், “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்பதும் இன்று நாம் கேட்கும் பொருள் மொழிகள்.

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றியில் படமாடக் கோயில் பகவற்க தாமே

என்னும் திருமூலர் கருத்துப்படி, தரித்திர நாராயணர் களுக்கு (இல்லையென்று அலமந்து வந்தவர்க்கு) இல்லை யென்று சொல்லாமல் ஏதோ வழங்கி அவர்கள் உயிரைக் காப்பவர்களுக்குத் தெய்வம் துணைநிற்கும் என்று கண்டார் விவேகானந்தர். எனவே சொன்னார்:

“நகரத்திலே இடர்ப்படும் மக்களுக்கு சமூக சேவை செய்வதிலேயே எனக்கு விருப்பம். ஏழை மக்கள்தான் நான் வணங்கும் கடவுள். அவர்களுக்குக் கல்வி இல்லை; முன்னேற்றம் அடைவது எப்படி என்பதே அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு வேண்டிய செளகரியங்களை யார்தான் செய்துவைப்பார்? வீடு வீடாகச் சென்று கல்வி யறிவைப் பரப்ப முன்வாருங்கள். இடையறாது ஏழை மக்களைப் பற்றியே எண்ணுங்கள்; அவர்களுக்காக உழையுங்கள்; கடவுளை வணங்குங்கள். இங்ஙனம் செய்யின் இறைவன் உங்களுக்கு வழிகாட்டி வைப்பான். ஏழைகளுக்காகவென்று யார் உள்ளம் கசிந்துருகிக் கண்tைர் சொரிகின்றார்களோ அவர்களே மகாத்மாக்கள். ஏனையவர்களெல்லாம் துராத்மாக்களேயாவர். ஏழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/109&oldid=586847" இலிருந்து மீள்விக்கப்பட்டது