பக்கம்:அறநெறி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.еит, 9

கள் என்ற தலைப்பமைந்த கவிதையில், நாமே நமக்குத் துணையானால், நாடும் பொருளும் நற்புகழும், தாமே நம்மைத் தேடிவரும் என்றும், நெஞ்சிற் கருணையும் நேயமும் விஞ்சும் பொறுமையும் கொண்டவர்க்கு வெல்லும் படைகள் வேறு வேண்டா” என்றும், உள்ளம் பொருந்தி ஊக்கம் பெருக உழைத்தால் தடைகள் பொடி யாகிப் பள்ளம் உயர்மேடாகும்’ என்றும் கூறுவதைக் கண்டு தெளியலாம்.

நிலையாமை

நாள் என்பது ஒரு காலவரையறை போல் தோன்று கின்றது. அதனால் ஒவ்வொரு நாளும் கழிவதைக் கண்டு பலரும் மகிழ்கின்றார்கள். நாள் என்பது ஒரு காலவரை யறை போல் காட்டினாலும், அந்த வரையறை முடிவதற் குள் செய்யத்தக்க நல்வினை எல்லாம் விரைந்து செய்ய வேண்டும். வாழ்நாள் உள்ளபோதே பயனுள்ளவற்றை எண்ணி அறத்தைப் போற்ற வேண்டும். உயிர் உடம்பில் வாழும் இயல்பை உணர்ந்தால் இந்த அறநினைவு மாறாது. விழிப்பு உள்ளபோது கடமைகளைச் செய்து முடிப்பதுபோல், வாழ்வு உள்ளபோதே அறத்தைப்போற்றி உயரவேண்டும்.

Ց:III)ճվ

அருளுணர்வு மிகுந்து தன்னலம் தேய்ந்து அழிந்த பின், வாழ்க்கையில் பற்று எல்லாம் அற்றுப் போகும், அப்போது இல்லறத்தில் இருந்து கொண்டு அகத் துறவோ, இல்லறத்தைவிட்டு வாழும்புறத்துறவோ மேற். கொள்ளுவர். ஒருவன் எதனிடம் பற்றுக்கொண்டு வாழ் கின்றானோ அதனால் துன்பம் அடைவான். எதிலிருந்து எதிலிருந்து பற்று நீங்கி வாழ்கின்றானோ அதனால் அதனால் அவனுக்குத் துன்பம் இல்லை, ஆகையால் துன்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/11&oldid=586848" இலிருந்து மீள்விக்கப்பட்டது