பக்கம்:அறநெறி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 அறநெறி

கோயிலை அடையாளம் காட்டுமுகத்தான் ஒரு செய்தி யைச் சொல்லுகின்றார். அத்திருக்கோயிலின் முன் பெருங்காற்று வீசி வீசித் தொடுக்கப்பட்ட மணல் குன்று போலக் குவிந்து கிடக்கின்றது என்று குறிப்பிடுகின்றார்.

睡 轟 睡 ■ 陣 睡 郵-轟 蟲 தாழ்நீர் வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக் கடுவளி தொகுப்ப ஈண்டிய m வடுவாழ் எக்கர் புறநானூறு 55 : 17-21 மேலும்,

சூர்மறுங் கறுத்த சுடரிலை நெடுவேற் சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை

-அகநானூறு 59 : 10 12 என்று அகநானுாறும்,

ஒன்னாதார்க் கடந்தடுஉம் உரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்று -கலித்தொகை 27 என்று கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையும்,

வன்கை வினைஞர் அரிபறை யின் குரல் அளிமழை பொழியும் தண்பரங் குன்றில்

-மதுரைக்காஞ்சி 262-263 என்று மதுரைக்காஞ்சியும் திருப்பரங்குன்றத்தைக் குறிப்பிடு கின்றன.

வேலுண்டு வினையில்லை’ என்பது தமிழர் நம்பிக்கை

மெய்கண்ட தெய்வமித் தெய்வமல் பொற்புவியில்

வேறில்லை -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் 7 : 6 என்று முருகப் பெருமானே முழுமுதற் பரம்பொருள் என்பார் குமரகுருபரர். மேலும் வால்மீகி இராமாயணத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/28&oldid=586879" இலிருந்து மீள்விக்கப்பட்டது