பக்கம்:அறநெறி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£j.tum. &

மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த காற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

(புறநானூறு 183) Ը1ւգ. படி, படித்துக்கொண்டே இரு’ என்று உருசிய நாட்டு உலகப் பெருந்தலைவர் இலனினும் மாணவர்க்கு அறிவுரை கூறியதாகக் குறிப்பிடுவர். இறை நம்பிக்கையும் பக்தியும் மிகுந்த தமிழகத்தில் மக்கட்குக் கல்வியின் சிறப்பை உணர்த்தப் பின்வருமாறு குறிப்பிடுவர். கல்விக்குக் கடவுள் கலைமகள் எனப்படும் சரசுவதி தேவியார். அந்தச் சரசுவதி தேவியாரே இன்னும் கையில் நூல் வைத்துக்கொண்டு எந்நேரமும் படித்துக்கொண்டி ருக்கிறார். அவ்வாறிருக்கையில் மக்களாகப் பிறந்த நாம் அனைவரும் கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உளகளவு என்பதனைப் பின்வரும் தனிப்பாடல் உணர்த்துகிறது.

உற்ற கலைமடங்தை போதுகிறாள்-மெத்த வெறும்பந்தயங்கூற வேண்டாம் புலவீர் எறும்பும் தன் கையால் எண்சாண் (பி. இரத்தினநாயகர் சன்ஸ்-தனிப்பாடல் திரட்டு - முதற்பாகம் ப. 18)

இந்தியா பெற்றெடுத்த இணையிலாத ஒவியர் இரவிவர்மா வரைந்த அமர ஒவியம் கலைமகள் சித்திரத் தைக் காணும் எவர்க்கும் இந்தப் பாட்டு, பளிச்சென்று நினைவிற்கு வராமற் போகாது.

“பாடை ஏறினும் ஏடது கைவிடேல்” என்பது தமிழ்ப் பழமொழி. இப்பழமொழி பிறழ உணரப்பட்டுத் தவறான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/33&oldid=586886" இலிருந்து மீள்விக்கப்பட்டது