பக்கம்:அறநெறி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 35

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயின் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார் எச்சம்என ஒருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற -நாலடியார் 143

மேனாட்டிலும் இவ்வாறு கல்வி கொள்ளப்படுகிறது” “ஓர் உயர்ந்தநூல் உத்தமர் ஒருவருடைய குருதிக்குச்சமம்” (A Precious Book is the Life—Blood of a Master Spirit) என்பர். “இன்று காலையுணவின்போது ஒருவகைத் தனிமைத் துன்பம் உணர்ந்தேன். ஷேக்ஸ்பியர் நூலொன்றினை விரித்துப் படித்தேன். அங்கே நான் நல்லமைதி கண்டேன்” ( Felt Rather lonely This Morning at Breakfast. So I Went and unboxed a Shakespeare, There is My Comfort ) arcărgy & Laio Gréârm ஆங்கிலக் கவிஞர் தம் கடிதம் ஒன்றில் குறிப்பிட் டிருப்பதை நினைவில் பதித்தல் நல்லது.

இராபர்ட் சதே என்னும் கவிஞர் “அறிஞர் என்றோர் ஆங்கிலக் கவிதை புனைந்துள்ளார். அக் கவிதையில் நூல்கள்தாம் தம்மைவிட்டு நீங்காத நல்ல நண்பர்கள் என்றும், அவர்களோடுதாம் நாள்தோறும் உறவாடி மகிழ்ந்து அமைதி பெறுவதாகவும் குறிப் பிட்டுள்ளார்.

My never failing friends are they With whom I converse day by day

—Robert Southey, The Scholar பொருட்செல்வம், கல்விச்செல்வம் ஆகிய இரண் டினும் நம் முன்னோர்கள் கல்விச் செல்வத்திற்கே அதிக மதிப்புத் தந்தார்கள். செல்வம் வண்டிச்சக்கரம் போல மாறிமாறி வரும்; ஒரிடத்தில் நிலைத்து நிற்காது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/37&oldid=586911" இலிருந்து மீள்விக்கப்பட்டது