பக்கம்:அறநெறி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 67

2. நா அசைய நாடு அசையும்

(A good tongue is a good weapon of the country)

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன் களும் மனிதனை ஆள்கின்றன. இந்த ஐம்புல வேடரால் ஆட்பட்டேன்’ என்று அயர் பெருமானும் புலம்பிக் கூறி யிருப்பதனை நோக்கலாம். ஐம்புலன்களின் ஆளுகையில், அதன் வசத்தில் இருக்கும்பொழுது, மனிதன் முன்னேறுவ தில்லை. ஐம்புலன்களை ஆளுகின்ற பெற்றியினை மனிதன் பெற்றுவிட்டால். அவன் ஏவலுக்கு ஐந்து புலன்களும் நின்று பணி செய்கின்றன. ጏ...6ህGö)öና உருவாக்கிய உத்தமர்கள், உலகைத் தி ரு த் தி ய ‘உத்தமர்கள் பலர் ஐம்புலன்களின் வழியே தாம் செல்லாமல், தம் வழியில் ஐம்புலன்களை ஆட்டிப்படைத்த

வர்கள் ஆவார்கள்.

இந்த ஐம்புலன்களில் கண் நுட்பமான கருவியே எனினும், நாக்கு சிறப்பிடம் பெறுகிறது. பேசப் போனாயோ சாகப் போனாயோ என்றொரு பழமொழி நாட்டில் வழங்குகின்றது. சொல்லும் சொல்லில் சோர்வு, பட்டு விட்ட்ால், அதனால் வரும் தீங்கு சில சமயங்களில் உயிருக்கே உலை வைப்பதாகவும் அமைந்துவிடும். எனவே தான் திருவள்ளுவரும் காத்தோம்புக சொல்லின் சோர்வு’ என்றார். எனவே சொற்குற்றம் வாராது காத்தல் தலையாய செயலாகின்றது. .ெ சா ல ல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது” என்றார் திருவள்ளுவர். சொல்லுதல் வல்ல ஒருவன் வெற்றிக் கணியை வேண்டும்போது பற்றிக்கொள்ளலாம் என்பது இதனால் பெறப்படுகின்றது! சொல்வன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/69&oldid=586962" இலிருந்து மீள்விக்கப்பட்டது